மத்திய கிழக்கில் நீடித்து வரும் போருக்கு மத்தியில், முக்கிய கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியின் நுழைவாயிலில் அமெரிக்காவின் மிகவும் நவீனமான, ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை கைப்பற்றியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.
நீருக்கடியில் உளவு பார்த்தல், கடல் வரைபடம் தயாரித்தல் மற்றும் கண்ணிவெடிகளைக் கண்டறியும் பணிகளுக்காக அமெரிக்காவால் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த ஆளில்லா நீர்மூழ்கி கப்பலை, ஈரானின் கடற்படை உளவு ஆபரேஷன் மூலம் பறிமுதல் செய்துள்ளது. கைப்பற்றப்பட்ட உபகரணங்களின் வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை விரைவில் வெளியிட உள்ளதாக ஈரான் அரசுத் ஊடகம் தெரிவித்துள்ளது.
உலகின் 20% எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் பெரும் சர்வதேசப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்கா தரப்பில் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ கருத்துக்கோ அல்லது பதிலுக்கோ மறுப்பு தெரிவிக்கப்படவில்லை.
சென்னையில் நடைபெற்ற ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் நடிகர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னாள் நிர்வாகி நாகை பூபாலன் கைதான விவகாரத்தில், சர்வதேச அளவில் இயங்கும் மாபெரும் போதைப்பொருள் கடத்தல்…
உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்திற்குட்பட்ட ஜகத்பூர் பகுதியைச் சேர்ந்த சுக்பீர் சிங் என்பவர் அரியானாவில் பணியாற்றி வந்தார். 11 ஆண்டுகளுக்கு…
தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த், பெங்களூரு எலகங்கா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டு மக்காச்சோள இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் செய்து…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…
சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…