முன்பெல்லாம் சொத்துக்கு பட்டா வாங்குவது என்பது குதிரைக்கொம்பாக இருந்தது. ஆனால் முதல்வர் ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையின் காரணமாக அந்த பிரச்சினை எல்லாம் தற்போது தீர்ந்துவிட்டது. அதாவது https://eservices.tn.gov.in/eservicesnew/home.html என்ற இணையதளம் மூலமாக பொதுமக்கள் எளிதாக பட்டா பெற்றுக் கொள்ளலாம். அதேபோல இப்போது பத்திரப்பதிவு செய்தவுடன் உட்பிரிவு இல்லாத சொத்துகளுக்கும் உடனடி பட்டா மாறுதல் செய்யப்படுகிறது. தற்போது சொத்து பற்றிய உரிமை விவரங்களை மக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் விதமாக தமிழக அரசின் வருவாய்த்துறை புதிய ஆன்லைன் வசதி அறிமுகம் செய்ய உள்ளது.
அதில் ஒரு சொத்தின் உரிமையாளர் யார்? அவருடைய பெயர் என்ன? இதற்கு முன்பு இந்த சொத்து யார் பெயரில் இருந்தது? அதோடு வங்கியில் இருந்து சொத்து அடமானத்தில் உள்ளதா? அதில் என்னென்ன மாற்றங்கள் நடந்துள்ளது ? என்பதற்கான முழு விவரத்தையும் பத்திரப்பதிவு துறை வழங்கும் வில்லங்கச் சான்றிதழ் மூலம் தெரிந்து கொள்ள முடியும். அதே நேரத்தில் ஒரு சொத்தின் தற்போதைய உரிமையாளரை வருவாய்த்துறை மூலமும், பட்டா மூலமும் தெரிந்து கொள்ளலாம்.
ஆனால் பட்டாவில் பத்திரப்பதிவு வழங்கும் வில்லங்க சான்றிதழ் போல அனைத்து விவரங்களையும், பரிமாற்றங்களையும் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் தமிழக அரசு அதற்கு தீர்வு காணும் விதமாக தற்போது பட்டா வரலாறு என்ற புதிய சேவை பொதுமக்களுக்காக கொண்டு வந்துள்ளது. இதன் மூலமாக முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும். இந்த புதிய நடைமுறை அடுத்த வாரம் முதல் சோதனை அடிப்படையில் தொடங்குகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…