அமெரிக்கப் பயணி ஒருவர் கொச்சி நகரத்தைப் பற்றி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் ‘வட இந்தியா vs தென் இந்தியா’ என்ற விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், கொச்சி நகரம் மிகவும் தூய்மையாகவும், ஒழுங்காகவும் இருப்பதைச் சுட்டிக்காட்டிய பயணி, “இது அழுக்கல்ல” என்று வியப்புடன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வட மாநிலங்களில் உள்ள சில நகரங்களுடன் ஒப்பிட்டு, தென் இந்தியாவின் தூய்மைப் பராமரிப்பு மற்றும் பொது ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக அவர் கருத்து தெரிவித்ததே இந்த விவாதத்திற்குப் புள்ளியாக அமைந்தது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் இரு பிரிவாகப் பிரிந்து தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
A post shared by Chloe Jade (@chloejadetravels)
“>
இதனால் தென் இந்தியர்கள் தங்கள் மாநிலங்களின் கட்டமைப்பு மற்றும் தூய்மையைப் பெருமையுடன் பதிவிட்டு வரும் நிலையில், வட இந்தியாவைச் சேர்ந்த சிலர் இது ஒருதலைப்பட்சமான பார்வை என்று வாதிடுகின்றனர். இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளுக்கிடையிலான கலாச்சாரம், சுகாதாரம் மற்றும் நிர்வாகத் திறன்கள் குறித்த இந்த ஆரோக்கியமற்ற விவாதம், சமூக ஊடகங்களில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…