வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் கதாநாயகனாக நடித்து வரும் ‘அரசன்’ திரைப்படம், தமிழ் சினிமாவின் மாபெரும் எதிர்பார்ப்பாக உருவெடுத்துள்ளது. இத்திரைப்படம் ‘வடசென்னை’ படத்தின் யுனிவர்சில் பயணிக்கும் கதையாக உருவாக்கப்பட்டு வருகிறது. வடசென்னை படத்தில் ‘சந்திரா’ கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா இதிலும் நடிக்கிறார் என்றும், இதில் ஒரு ட்விஸ்ட்டாக சிம்பு அவருக்கு மகனாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. வடசென்னை கதையின்படி சந்திராவிற்கு குழந்தை இருப்பது போல் காட்டப்படாததால், இந்த புதிய திருப்பம் ரசிகர்களிடையே பெரும் சந்தேகத்தையும் சுவாரசியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவர்களுடன் விஜய் சேதுபதி வில்லனாகவும், யோகலக்ஷ்மி, பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு, விக்ராந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர்.
முன்னதாக, ஐசரி கணேஷ் தயாரிப்பில் ‘கொரோனா குமார்’ படத்திற்காக வாங்கிய அட்வான்ஸ் தொகை தொடர்பான பஞ்சாயத்தால், FEFSI அமைப்பின் தலையீட்டின் பேரில் ‘அரசன்’ படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் சிம்பு அந்தத் தொகையின் பெரும்பகுதியைத் திருப்பித் தர ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி தற்போது இரவு பகலாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படக்குழுவினர் இந்த வேகத்தில் பணிகளை முடித்து, வரும் தீபாவளி பண்டிகையையொட்டி திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இத்திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய மற்றும் மாஸான கூட்டணி இணைந்துள்ளது. சிம்பு மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் ஆகிய இருவரின் படங்களுக்கும் இதுவரை அனிருத் இசையமைத்தது இல்லை என்ற குறையை ‘அரசன்’ திரைப்படம் ஒரே நேரத்தில் தீர்க்கவுள்ளது. முதன்முறையாக இவர்களது கூட்டணிக்கு அனிருத் இசையமைப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பல மடங்கு அதிகரித்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…