தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுக மற்றும் பாஜக இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் அனலைக் கிளப்பியுள்ளது. கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுக்குக் கிடைத்த 11 சதவீத வாக்கு வங்கியை முன்வைத்து, இந்த முறை கூடுதல் இடங்களைப் பெற பாஜக கறாரான பிடியில் உள்ளது. குறிப்பாக, அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு குறைந்தபட்சம் 30 தொகுதிகளாவது ஒதுக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு கீழே பேச்சுக்கே இடமில்லை என்றும் அக்கட்சி மேலிடம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான பாஜக குழு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஏனைய கட்சிகளான அமமுக, புதிய நீதிக்கட்சி மற்றும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவற்றையும் உள்ளடக்கி மொத்தம் 50 தொகுதிகள் வரை அதிமுகவிடம் எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது. இதில் பாஜகவுக்கு மட்டும் 30 முதல் 35 இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்பது அவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. கடந்த 2021 தேர்தலில் ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகள் என்பது தற்போதைய சூழலுக்குப் போதாது என்பது பாஜகவின் வாதமாக இருக்கிறது.
மறுபுறம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது நிலையில் மிகவும் உறுதியாக இருக்கிறார். அதிமுக தனித்து 170 தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையைப் பெற முடியும் என்பதில் அவர் தெளிவாக உள்ளார். இதனால் பாஜகவுக்கு அதிகபட்சமாக 25 தொகுதிகளையும், மற்ற சிறிய கூட்டணிக் கட்சிகளுக்கு 10 தொகுதிகளையும் மட்டுமே ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளது. மேலும் பாமக, தமாகா போன்ற கட்சிகளையும் திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயம் அதிமுகவுக்கு இருப்பதால், இடங்களைப் பகிர்ந்து கொடுப்பதில் பெரும் சவால் நிலவுகிறது.
தற்போது இரு தரப்பிற்கும் இடையே இழுபறி நீடித்து வந்தாலும், வரும் மார்ச் 1-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வருகை தர உள்ளார். அவரது வருகைக்குப் பிறகு நிலவும் முட்டுக்கட்டைகள் நீங்கி, தொகுதிப் பங்கீடு தொடர்பான இறுதி உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தங்களின் செல்வாக்கை நிரூபிக்க பாஜகவும், ஆட்சியைப் பிடிக்க அதிமுகவும் மல்லுக்கட்டி வருவதால், இந்த “பவர் பாலிடிக்ஸ்” வரும் நாட்களில் இன்னும் சூடுபிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணியின் வேட்பாளராக இயக்குநர் சுந்தர்.சி களமிறங்கியுள்ள நிலையில், அவரை எதிர்த்து நடிகர் பிரகாஷ் ராஜ்…
அரசியல் மேடைகளில் மொழிபெயர்ப்பு என்பது ஒரு கலை, ஆனால் அது சில நேரங்களில் விபத்தாக முடிந்துவிடுவதுண்டு. முன்னொரு காலத்தில் ராகுல்…
தமிழக அரசியலிலும் திரையுலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜய்யின் விவாகரத்து விவகாரம், தற்போது இறுதிக்கட்டத்தை…
சூரஜ் மற்றும் கோமல் ஆகிய இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, மகிழ்ச்சியாக இருந்த நிலையில், யாரோ ஒரு நபர் அனுப்பிய ஒரு…
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தலைநகர் சென்னை மக்களுக்காக 'சென்னை சூப்பர்-6' என்ற அதிரடி தேர்தல் வாக்குறுதிகளை திமுக…
இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'தாய்…