தமிழக அமைச்சரவையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணையக்கூடும் என்ற அரசியல் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். முன்னதாக திருவாரூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் வீரபாண்டியன், “அமைச்சரவையில் கம்யூனிஸ்ட் இணையும் காலம் வரும்” என்று குறிப்பிட்டதைத் தொடர்ந்து, தவெக அமைக்கவிருக்கும் அமைச்சரவையில் இவ்விரு கட்சிகளும் இணையலாம் என்ற விவாதங்கள் பரவலாக எழுந்தன.
இந்த அரசியல் பரபரப்புகளுக்கு தற்போதைய திருவாரூர் நிகழ்ச்சியில் விளக்கமளித்துள்ள பெ.சண்முகம், தவெக அரசுக்கு வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு தொடரும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். இதன் மூலம், தேர்தல் நெருங்கும் வேளையில் தவெக மற்றும் இடதுசாரி கட்சிகளுக்கு இடையேயான அதிகாரப் பகிர்வு குறித்த விவாதங்களுக்கு அவர் தற்காலிகமாக திரை விடுத்துள்ளார்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…