#image_title
மகாராஜா திரைப்படத்தின் இயக்குனர் நித்திலன் சாமிநாதன் விஜயை சந்தித்தது குறித்து ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசி இருக்கின்றார்.
தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தொடர்ந்து வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த இவர் ஜவான் திரைப்படத்திற்கு பிறகு இனி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். அதையடுத்து தனது 50-வது திரைப்படத்தின் மூலமாக கம்பேக் கொடுத்த விஜய் சேதுபதி மகாராஜா திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் கடந்த ஜூன் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் பாசிடிவ்வான விமர்சனங்களை தெரிவித்து வந்த காரணத்தினால் படம் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. 100 கோடி வரை வசூல் செய்ததாக பட குழுவினர் தெரிவித்திருந்தார்கள். இந்த திரைப்படத்தை இயக்கியவர் நிதிலன் சுவாமிநாதன்.
குரங்கு பொம்மை என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான இவர் தான் எடுத்த இரண்டாவது திரைப்படத்தின் மூலமாக மிகப் பெரிய புகழை அடைந்திருக்கின்றார். மகாராஜா திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருக்கின்றது. இதையடுத்து இந்த திரைப்படத்தை குறித்து பல பிரபலங்கள் நித்திலன் சாமிநாதனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தார்கள்.
அதிலும் நடிகர் விஜய் அவரை நேரில் அழைத்து பாராட்டி இருந்தார். நடிகர் விஜய் அப்போது என்ன கூறியிருந்தார் என்பது குறித்து நித்திலன் சுவாமிநாதன் தனது பேட்டியில் பகிர்ந்து இருக்கின்றார். அதில் பேசிய அவர் “இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. பல பிரபலங்கள் என அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.
நடிகர் விஜய் என்னை அழைத்ததும் எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவரை போய் பார்த்ததும் அவர் ஸ்கிரீன் பிளே டைரக்ஷன் என படம் தொடங்கியது முதல் அனைத்தையும் குறிப்பிட்டு பேசியிருந்தார். விஜய் சேதுபதி நடித்த ஒவ்வொரு கேரக்டரையும் பாராட்டி பேசினார். இந்த படத்தின் கதையை 10 வருடத்திற்கு முன்னாள் இயக்குனர் ஜெகதீஷிடம் உரையாடினேன் என்று தெரிவித்திருந்தார்.
மேலும் நடிகர் விஜய் பேசிக் கொண்டிருந்தபோது நான் அவரை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் என்ன என கேட்டாரா? நான் இல்ல சார் நீங்க பேசுங்க நான் உங்கள பாத்துகிட்டே இருக்கேன் என்று சொன்னேன். அதற்கு அவர் என்னை பார்த்து சிரித்தார்” என்று விஜய்யை சந்தித்தது குறித்து மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருக்கின்றார் நிதிலன் சுவாமிநாதன்.
தானேவின் தலாவ் பாலி பகுதியில் பொது இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, சில பெண்களை சிவசேனா மகளிர் அணியினர்…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்திகள் அனுப்பி, இல்லம் சென்று தகராறு செய்ததாகத் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது…
ஆந்திரப் பிரதேசம் ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்த்துள்ளதாக முன்னாள் அமைச்சர்…
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த ஷாசியா பர்வீன், அச்சமற்ற 'பெண் பாம்பு பிடிப்பவராக' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிறுவயது முதலே…
பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பெண் பயணி ஒருவரிடம் தொலைபேசியில் பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசிய சம்பவம்…
ஹைதராபாத் நாகோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜைபுரி காலனியில் வசித்து வருபவர் சம்பங்கி சுரேஷ். இவரது மனைவி சுகுணா மற்றும்…