ரசிகர்களுக்கு குட் நியூஸ் கூறி புகைப்படத்தை வெளியிட்ட நிஷா கணேஷ்… வாழ்த்துக்கள் கூறும் பிரபலங்கள்…

By Begam on ஆனி 12, 2023

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன். இவர் 2009 இல் வெளியான அபியும் நானும் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தார். இதை தொடர்ந்து உன்னை போல் ஒருவன், தனி ஒருவன், தொடரி போன்ற எண்ணற்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவரை மக்கள் மத்தியில் அடையாளப்படுத்தியது என்னவோ பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

   

இவர் நிஷா கணேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நிஷா கணேஷ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளனியாக வலம் வந்தவர். இவர் பல சீரியல்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். கனா காணும் காலங்கள், தெய்வமகள், ஆபீஸ், சரவணன் மீனாட்சி ,தலையணை பூக்கள், மகாபாரதம் போன்ற பல்வேறு சீரியல்களில் நிஷா நடித்துள்ளார்.

   

 

சின்னத்திரையில் மட்டுமின்றி இவர் வெள்ளித்திரையிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை நிஷாவும் , நடிகர் கணேஷும்  2017ல் காதலித்து  திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சமைரா என்ற மகளும் உள்ளார்.

திருமணம் முடிந்து தற்பொழுது எட்டு வருடங்களுக்கு பிறகு  இரண்டாவதாக கர்ப்பம் தரித்துள்ளார் நிஷா கணேஷ். இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்….