ரூ.500 கோடி டீலிங்?…. சிக்கிய 20 ஆண்டு வீடியோ ஆதாரம்….. ஜெம் வீரமணி வழக்கால் அலறும் தமிழக அரசியல்… அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு புகார்…!

Spread the love

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத் தலைவர் ஆர். வீரமணி, சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்து சீரழித்ததாக எழுந்துள்ள POCSO வழக்கின் விவகாரம், தமிழக அரசியலில் பெரும் புயலையும் கடுமையான காரசார விவாதங்களையும் கிளப்பியுள்ளது. கடந்த திமுக ஆட்சிக்காலத்தில், இது தொடர்பான வீடியோ வீடியோ ஆதாரங்கள் மற்றும் புகார்கள் காவல் துறைக்குக் கிடைத்தபோதிலும், வழக்கில் எந்தவிதத் தீர்க்கமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல், போதிய சாட்சியங்கள் இல்லை எனக்கூறி வழக்கை முடித்து வைக்க முயன்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சில காவல்துறை அதிகாரிகளும் அரசியல் பிரமுகர்களும் வீரமணியிடம் பெருந்தொகை பேரம் பேசி வழக்கு மூடி மறைக்கத் துணை நின்றதாகக் கூறப்படுகிறது.

தற்போது தமிழகத்தில் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு தொழில் அதிபர் வீரமணியைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. மேலும், இந்த அநீதிக்கு உடந்தையாக இருந்த சாந்தி, மகேந்திரன் மற்றும் கணேசன் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று மதுராந்தகம் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், “திமுக ஆட்சிக் காலத்தில் வீரமணியைத் தப்பவிட்டதன் பின்னணியில் என்ன மாதிரியான பேரங்களும் டீலிங்கும் நடந்தன?” எனத் தனது அடுக்கடுக்கான கேள்விகளால் எதிர்க்கட்சியைத் திணறடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், திமுக ஆட்சியின்போது ஜெம் வீரமணியிடம் கட்டப் பஞ்சாயத்து செய்து ரூ. 500 கோடி வரை பணம் பறிக்கப்பட்டதாகப் புகார்கள் வந்து கொண்டிருப்பதாகக் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். “அப்போது காவல் துறையைத் தனது கையில் வைத்திருந்த அப்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் என்ன செய்து கொண்டிருந்தார்? சிறுமிகள் சீரழிக்கப்பட்ட வீடியோ சான்றுகள் கிடைத்த பிறகும், இந்த கொடூர சம்பவத்தைக் கண்டுபிடிக்க ஏன் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்கவில்லை?” என்றும், முன்னாள் அமைச்சர் ரகுபதிக்கு வீடியோவில் வெளிச்சம் குறைவாக இருந்தது பற்றி எப்படித் தெரியும் என்றும் காட்டமாகக் கேள்விகளை எழுப்பினார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

Nanthini

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

5 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

6 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

6 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

6 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

6 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

6 மணத்தியாலங்கள் ago