SIR பற்றி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு என்னவென்று தெரியவில்லை. கொளத்தூர் தொகுதியில் 4379 போலி வாக்காளர்கள் இருக்கின்றன. அப்படி என்றால் போலி வாக்காளர்களை வைத்துதான் கொளத்தூரில் வெற்றி பெற்றீர்களா என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். இது குறித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வாக்கு திருட்டு நடந்தால் நான் ஒரு உதாரணத்தை எடுத்து சொல்கிறேன். 4329 போலி வாக்காளர்கள் கொளத்தூர் தொகுதியில் இருக்கின்றனர்.
அதாவது ஒரே பெயர், ஒரே சொந்தக்காரர்கள் பெயர், ஒரே வயது. ஆனால் வேறு வேறு வாக்காளர் அடையாள அட்டை நம்பர். இப்படி 4329 போலி வாக்காளர்கள் கொளத்தூர் தொகுதியில் மட்டும் இருக்கிறார்கள். இதை நான் உதாரணத்திற்கு சொல்லவில்லை. குத்து மதிப்பாக சொல்கிறேன், பூத் நம்பர் 157 இல் ரபி உல்லா என்ற பெயர் மூன்று முறை வருகிறது. ஒரே முகவரியில் ஒரே வயதில் அவரது தந்தை பெயரும் ஒன்றே. ஆனால் அவரிடம் மூன்று வாக்காளர் அடையாள அட்டைகள் இருக்கிறது. கொளத்தூரில் 913 பேர் போலி முகவரியில் இருக்கிறார்கள்.
இதை வைத்து தான் திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூரில் வெற்றி பெற்றார் என்று சொல்ல முடியுமா? நீங்கள் நீக்குவதற்கான பெயர் தான் SIR. இல்லை இல்லை எங்களுக்கு SIR வேண்டாம் என்றால் இந்த போலி வாக்காளர் அடையாள அட்டையை வைத்து தான் ஸ்டாலின் ஜெயித்தாரா, நீங்கள் வாக்கு திருட்டு மூலமாகத்தான் வெற்றி பெற்றீர்களா, அந்த சீர்திருத்தம் வேண்டாமா, உங்க போராட்டம் இதற்கு எதிராக இருந்தால் உங்கள் தொகுதியில் இருக்கக்கூடிய இந்த வாக்காளர் அடையாள அட்டை போலியை எப்படி நீக்குவது? கொளத்தூர் தொகுதியில் மட்டுமே இவ்வளவு குளறுபடிகள் இருக்கிறது. இதனை சீர்திருத்தம் செய்ய வேண்டுமா வேண்டாமா என்று நிர்மலா சீதாராமன் நடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.
பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…
பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…
சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…