Categories: உலகம்

“இது ஆரம்பம் தான்.. அடுத்து பவர் பிளான்ட் காலி!”… ஈரானை மிரளவிட்ட ட்ரம்பின் ‘வார்’ மெசேஜ்… பதிலுக்குப் பதில் ஈரான் கொடுத்த மாஸ் ரிப்ளை… போர்க்களமாகும் மத்திய கிழக்கு…!!!

Spread the love

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் போர் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ளது. வரும் வாரங்களில் ஈரானின் உள்கட்டமைப்புகள் மீது இன்னும் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ஈரானின் மின் நிலையங்கள் மற்றும் பாலங்களை குறிவைத்து அமெரிக்காவின் சக்திவாய்ந்த ராணுவம் அடுத்தகட்ட அழிப்புப் பணிகளைத் தொடங்கும் என்றும், புதிய ஆட்சியின் தலைமை என்ன செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த எச்சரிக்கைக்கு முன்னதாக, ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு மேற்கே கராஜ் நகரில் கட்டுமானத்தில் இருந்த மத்திய கிழக்கின் மிக உயரமான (136 மீட்டர்) மேம்பாலத்தை அமெரிக்கா வான்வழித் தாக்குதல் மூலம் தகர்த்தது. இந்தத் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர் மற்றும் 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தின் வீடியோவை வெளியிட்ட ட்ரம்ப், ஈரான் உடனடியாக உடன்பாட்டிற்கு வரவில்லையெனில் இதுபோன்ற தொடர் தாக்குதல்களைச் சந்திக்க நேரிடும் எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பொதுமக்களின் கட்டமைப்புகள் மற்றும் முடிக்கப்படாத பாலங்கள் மீது தாக்குதல் நடத்துவது ஈரானியர்களைப் பணிய வைக்காது என்றும், இது அமெரிக்காவின் தார்மீக வீழ்ச்சியையே காட்டுகிறது என்றும் அவர் சாடியுள்ளார். மேலும், அமெரிக்காவின் இந்தத் தாக்குதலுக்கு ‘பதிலுக்குப் பதில்’ அளிக்கும் வகையில் ஈரான் தனது அடுத்தகட்ட நடவடிக்கையை அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கு ஆதரவாகச் செயல்படும் நாடுகளில் உள்ள எட்டு முக்கிய பாலங்களின் பட்டியலை ஈரான் வெளியிட்டு, அவற்றைத் தாக்கப்போவதாக எச்சரித்துள்ளது. இதில் குவைத்தின் கடல் பாலம், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷேக் சயத் பாலம், சவுதி-பஹ்ரைன் இடையிலான கிங் ஃபஹத் பாலம் மற்றும் ஜோர்டானில் உள்ள பாலங்கள் இடம் பெற்றுள்ளன. ஈரானின் இந்த அறிவிப்பால் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றம் நிலவுவதோடு, பாலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் வான்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Muthu Mani

Recent Posts

தவெகவிலிருந்து விலகும் மனநிலையில் செங்கோட்டையன்…? ரகசியத்தை உடைத்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்..!!

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…

51 minutes ago

குடிமகனாக மாறிய கெவின் பீட்டர்சன்? மதுக்கடையில் கேமரா முன்னிலையில் செய்த காரியம்… பதறிய ரசிகர்கள்… இறுதியில் காத்திருந்த ‘ட்விஸ்ட்’… இணையத்தை அதிரவைக்கும் வீடியோ…!!!

இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…

1 மணத்தியாலம் ago

காட்டில் ஒரு அதிசயம்!… பிறந்த ஒரே நாளில் இணையத்தை ஆக்கிரமித்த குட்டி காண்டாமிருகம்… வைரலாக கியூட் வீடியோ…!!!

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…

1 மணத்தியாலம் ago

8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ. 50,000 வைப்பு நிதி… தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் அதிரடி வாக்குறுதி..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…

2 மணத்தியாலங்கள் ago

கேரள விடுதியில் பயங்கரம்!… பெண் பயணியை முறைத்துப் பார்த்து உரிமையாளர் செய்த காமவெறிச் செயல்… வைரலாகும் ‘பகீர்’ வீடியோ…!!!

கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…

2 மணத்தியாலங்கள் ago

“நான் ஒரு அரசு ஊழியர், கைநிறைய சம்பளம் வாங்குறேன்” குடிபோதையில் டிராஃபிக் ஜாமில் காரை நிறுத்தி போலீசாருடன் மல்லுக்கட்டிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago