நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தகுதித் தேர்வுகளில் நிகழ்ந்த முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, ‘கரப்பான் பூச்சி ஜனதா’ அமைப்பினர் மற்றும் மாணவர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்ற போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதும், அதற்குப் பதிலடியாகக் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் இரு தரப்பிலும் சிலர் காயமடைந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் இல்லம் முற்றுகைப் போராட்டம் நடத்தி கைதாயினர்.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா, போராட்டக் குழுவின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் விரும்பும் எத்தனையோ மணி நேரத்திற்கும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். இருப்பினும், தங்களது கோரிக்கையில் உறுதியாக இருக்கும் போராட்டக்காரர்கள் ஜந்தர் மந்தரில் தங்களது எதிர்ப்பைத் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
இன்று போராட்டக் களத்தில் உரையாற்றிய அந்த அமைப்பின் நிறுவனர் அபிஜீத் திப்கே, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக ஏற்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். தோல்வியடைந்த ஒரு அமைச்சரை விட நாட்டின் கோடிக்கணக்கான மாணவர்களின் எதிர்காலமே முக்கியமானது என்று சுட்டிக்காட்டிய அவர், அமைச்சரின் ராஜினாமா ஏற்கப்படாவிட்டால் இந்தப் போராட்டம் அடுத்தகட்டமாகப் பிரதமரின் ராஜினாமாவை வலியுறுத்தும் போராட்டமாக மாறும் என்றும், வரும் தேர்தல்களில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.
உத்தராகண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் இனோவா கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர்…
ராஜஸ்தான் மாநிலத்தில் தீவிரமடைந்து வந்த குடும்பக் கடன் சுமையை சமாளிப்பதற்காக, வீட்டில் வளர்த்து வந்த பசுவை விற்க கணவர் எடுத்த…
சீனாவில் 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகையே உலுக்கிய ஒன்றரை வயதுக் குழந்தை மீதான கொடூரத் தாக்குதல் சம்பவம் குறித்த விவரங்கள்…
பெங்களூரு யெலஹங்கா பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் செவ்வாய்க்கிழமை அன்று அதிர்ச்சியூட்டும் கொலைச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலத்தைச்…
பத்ராவதியின் நாகசேனா நகரில் பயிற்சி வகுப்பு முடிந்து மிதிவண்டியில் வீடு திரும்பிய 8 வயது சிறுவன் மீது, 17 வயது…
ஹோட்டலின் ஏழாவது மாடியில் எதிர்பாராதவிதமாக நடந்த இந்த சோக சம்பவம், அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 26 வயதான ரிஹானா என்ற…