இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பாக அரசு என்னதான் எச்சரிக்கை விடுத்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம்தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி தொடர் மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக ஆன்லைன் மூலம் மோசடி சம்பவங்கள் அதிகரித்துவிட்டது. இப்படியான நிலையில் Local App இல் கதை படித்தால் தினமும் 700 ரூபாய் கிடைக்கும் எனக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் ஆசை வார்த்தை கூறி சிறிது சிறிதாக பணம் பெற்றதுடன், ஆரம்பத்தில் பணமும் கொடுத்தார்கள்.
பிறகு பெரிய அளவில் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டனர் என்று பாதிக்கப்பட்டவர்கள் வேதனையுடன் கண்ணீர் மல்க கூறியுள்ளனர். மொத்தம் 250க்கும் மேற்பட்டோர் ஏமாற்றப்பட்டதாகவும் பல கோடி ரூபாய் கையாடல் செய்யப்பட்டுள்ளதாகவும் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இதுபோன்ற போலி செய்திகளை நம்பி மக்கள் யாரும் ஆன்லைனில் ஏமாற வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று பலரும் வேலையில்லாமல் இருக்கும் நிலையில் செல்போன் மூலமாக ஏதாவது வேலை தேடிக் கொண்டிருக்க இது போன்ற செய்திகள் ஏதாவது கண்ணில் பட்டால் உடனே அதை நம்பி பணம் கிடைக்கும் என்ற ஆசையில் பணத்தை முதலீடு செய்ய தொடங்கி விடுகிறார்கள். இதனால் பின் நாட்களில் பெரும் இழப்பு ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவம் பெரிய உதாரணமாகும்.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…