“இன்று(ஏப்..1) முதல் அமல்”…. சிலிண்டர் விலை முதல் ATM கட்டணம் வரை…. எல்லாமே மொத்தமா மாறிடுச்சு… உடனே நோட் பண்ணுங்க…!

Spread the love

புதிய நிதியாண்டின் தொடக்கமான ஏப்ரல் 1 முதல், சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு நிதி மற்றும் வணிக மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன. சர்வதேச அளவில் மத்திய கிழக்குப் பகுதியில் நிலவி வரும் பதற்றமான சூழலால், கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர்களின் விலை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வணிக ரீதியிலான மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர்கள் மட்டுமன்றி, விமான எரிபொருள் (ATF) மற்றும் சிஎன்ஜி (CNG), பிஎன்ஜி (PNG) ஆகியவற்றின் விலைகளிலும் எதிரொலிக்கக்கூடும், இதனால் போக்குவரத்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

வங்கிகளின் ஏடிஎம் (ATM) மற்றும் பரிவர்த்தனை விதிகளில் முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஹெச்டிஎப்சி (HDFC) வங்கியில் இனி யூபிஐ (UPI) மூலம் ஏடிஎம்மில் பணம் எடுப்பதும் இலவச வரம்பிற்குள் கொண்டு வரப்படும்; ஐந்து பரிவர்த்தனைகளுக்கு மேல் ஒவ்வொரு முறைக்கும் ரூ.23 கட்டணமாக வசூலிக்கப்படும். பஞ்சாப் நேஷனல் வங்கி டெபிட் கார்டு வரம்புகளைக் குறைத்துள்ள நிலையில், பந்தன் வங்கி மெட்ரோ நகரங்களில் மூன்று முறை மட்டுமே இலவசப் பரிவர்த்தனைகளை அனுமதிக்கிறது. மேலும், வங்கிக் கணக்கில் போதிய இருப்பு இல்லாததால் ஏடிஎம் பரிவர்த்தனை தோல்வியடைந்தால் அபராதமாக ரூ.25 வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடையாள அட்டை மற்றும் ரயில் பயண விதிமுறைகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இனி பான் (PAN) அட்டை பெறுவதற்கோ அல்லது திருத்தங்கள் செய்வதற்கோ ஆதார் அட்டை மட்டும் போதாது; பிறப்புச் சான்றிதழ் போன்ற கூடுதல் ஆவணங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. ரயில் பயணத்தைப் பொறுத்தவரை, ரத்து செய்வதற்கான விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்னதாகவே டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டும்; அதற்குள் ரத்து செய்தால் ரீஃபண்ட் கிடைக்காது. 8 முதல் 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் 50 சதவீதம் மட்டுமே பணம் திரும்பக் கிடைக்கும் என்பதால் பயணிகள் முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம்.

வருமான வரித் துறையைப் பொறுத்தவரை, 1961-ஆம் ஆண்டின் பழைய வருமான வரிச் சட்டத்திற்குப் பதிலாக, ‘2025-ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டம்’ முழுமையாக அமலுக்கு வருகிறது. இதன் காரணமாக வருமான வரித் தாக்கல் (ITR) செய்யும் நடைமுறைகளில் புதிய மாற்றங்கள் புகுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, இதுவரை பயன்பாட்டில் இருந்த ‘படிவம் 16’ நீக்கப்பட்டு புதிய படிவம் அறிமுகம் செய்யப்படுகிறது. அதேபோல் ‘படிவம் 16A’ என்பது இனி ‘படிவம் 131’ என அழைக்கப்படும். இந்த ஆவணங்கள் அனைத்தும் 15 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என்ற புதிய காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

“சிங்கத்தின் குகைக்குள்ளேயே நுழைந்து வெற்றி” கார்ல்சனின் கோட்டையைத் தகர்த்த பிரக்ஞானந்தா… வியந்து பாராட்டிய ஆனந்த் மகிந்திரா..!!

2026 நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்குப் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தனது…

2 minutes ago

பயிற்சியில் பாஸ் ஆனால் மட்டுமே பதவி… நிர்வாகிகளுக்கு அண்ணாமலை போட்ட அதிரடி கண்டிஷன்.. இடைத்தேர்தலிலும் அதிரடி முடிவு..!!

திறன் பயிற்சியில் தேர்ச்சி பெறுவோருக்கு மட்டுமே தனது கட்சியில் பதவி வழங்க கே. அண்ணாமலை முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.…

7 minutes ago

“கல்யாணம் வேணும்னா இதை செய்!”.. காதலி பெற்றோர் போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. காதலன் விபரீத முடிவு.. பதறவைக்கும் பின்னணி..!!

திருவள்ளூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகத்தின் இளைய மகன் தீபக் (26), ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஒரு…

8 minutes ago

“எல்லாத்துக்கும் திமுக தான் காரணமா..?” அப்புறம் ஏன் நீங்க ஆட்சியில் இருக்கீங்க..? எதிர்க்கட்சிகளை அதிரவைத்த மேயர் பிரியாவின் அதிரடி கேள்வி..!!

"எல்லாவற்றிற்கும் திமுக தான் காரணம் என்று நீங்கள் கூறுவதாக இருந்தால், பிறகு ஏன் நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள்? உங்கள் கைகளில்…

9 minutes ago

விடுதி மாணவிகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய… வார்டன் செஞ்ச வேலை.. தட்டிக்கேட்டதால் சாதி ரீதியாக இழிவுபடுத்திய தாளாளர்… திண்டுக்கல்லில் அதிர்ச்சி..!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள தனியார் கல்லூரி விடுதி மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வார்டன் மீது போலீசார்…

14 minutes ago

“அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க…” நள்ளிரவில் வார்டன் கொடுத்த பாலியல் தொல்லை.. திண்டுக்கல் கல்லூரியில் மாணவிகள் கதறல்..!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள தனியார் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்…

19 minutes ago