“இன்று முதல் புதிய ரூல்ஸ்”… உங்க போனில் இது இல்லையென்றால் வாட்ஸ்அப் வேலை செய்யாது… உடனே செக் பண்ணுங்க….!

Spread the love

வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற தகவல் தொடர்பு செயலிகளைப் பயன்படுத்துவதில் மார்ச் 1 முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இந்தியத் தொலைத்தொடர்புத் துறை கொண்டுவந்துள்ள ‘சிம் பைண்டிங்’ (SIM Binding) எனும் இந்த புதிய விதியின்படி, ஒரு பயனர் தனது வாட்ஸ்அப் கணக்கை வைத்திருக்கும் மொபைல் போனில், அந்த குறிப்பிட்ட சிம் கார்டு கண்டிப்பாக இருக்க வேண்டும். இதன் மூலம், இனி சிம் கார்டு இல்லாத சாதனங்களில் வாட்ஸ்அப் பயன்படுத்துவது சிக்கலாகலாம்.

தற்போதைய நடைமுறைப்படி, ஒருமுறை வாட்ஸ்அப் கணக்கை ஒரு போனில் பதிவு செய்துவிட்டால், அதன் பிறகு அந்த சிம் கார்டை நீக்கினாலும் அல்லது வேறு போனில் போட்டாலும், வைஃபை (Wi-Fi) உதவியுடன் பழைய போனில் வாட்ஸ்அப் தொடர்ந்து இயங்கும். ஆனால், புதிய மாற்றத்தின் கீழ், செயலிகள் அவ்வப்போது அந்த போனில் சிம் கார்டு இருக்கிறதா என்பதைத் தானாகவே சரிபார்க்கும். சிம் கார்டு அகற்றப்பட்டாலோ அல்லது செயலிழந்தாலோ, மீண்டும் அந்த சிம் கார்டைச் செருகி அங்கீகரிக்கும் வரை வாட்ஸ்அப் கணக்கு தற்காலிகமாக முடக்கப்படும்.

இணையப் பாதுகாப்பை மேம்படுத்தவும், போலி எண்கள் மூலம் நடக்கும் சைபர் குற்றங்களைத் தடுக்கவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிம் கார்டு மற்றும் செயலி ஆகியவற்றை நேரடியாக இணைப்பதன் மூலம், குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காண முடியும் என்றும், தவறான வழிகளில் வாட்ஸ்அப் பயன்படுத்தப்படுவதை இது பெருமளவு குறைக்கும் என்றும் அதிகாரிகள் நம்புகின்றனர். பொதுமக்கள் தங்களது முக்கியத் தொடர்புச் சாதனமான வாட்ஸ்அப்பை தடையின்றி பயன்படுத்த, சிம் கார்டு செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்வது அவசியமாகிறது.

Nanthini

Recent Posts

என்ன ஒரு டெக்னாலஜி..! புல்லுக்கட்டோடு குழந்தையையும் கட்டிச் செல்லும் தாய்… “அம்மாவை மிஞ்சிய போராளி யாருமே இல்ல” பாராட்டும் இணையவாசிகள்..!!

"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…

41 minutes ago

காலியான ஏவுகணைகள்…. கதி கலங்கிய டிரம்ப்…! ஈரான் போரில் அமெரிக்கா திடீர் பல்டி அடிக்க இதுதான் காரணமா…?

ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…

56 minutes ago

டாக்டர் இல்ல.. மருந்து இல்ல!… வெறும் 2 எளிய வழிகள்… முகப்பருக்களை விரட்டியடித்த 23 வயது இளம் பெண்ணின் சீக்ரெட் டிப்ஸ்… துபாய் பெண் பகிர்ந்த வைரல் வீடியோ..!!!

துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…

1 மணத்தியாலம் ago

ராகுல் காந்தி வந்தப்போ நடந்த அந்த ரெய்டு…. வீடியோ ஆதாரத்தால் சிக்கிய அதிகாரிகள்…? உண்மையை உடைத்த செல்வபெருந்தகை…!!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…

1 மணத்தியாலம் ago

“எங்க வீட்டு மகாலட்சுமி வந்தாச்சு” முதன்முறையாக வீட்டுக்கு வந்த AC-க்கு பூஜை போட்டு.. வைரலாகும் நடுத்தரக் குடும்பத்தின் நெகிழ்ச்சியான கொண்டாட்டம்..!!

நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…

1 மணத்தியாலம் ago