தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே சாலையோரத்தில் பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று அதிகாலை திண்டுக்கல் – குமுளி நெடுஞ்சாலையில் நடைப்பயிற்சி சென்ற பொதுமக்கள், சாலையோரத்தில் குழந்தை ஒன்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து வீரபாண்டி காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் நடத்திய முதற்கட்ட ஆய்வில், அந்த ஆண் குழந்தை ஏற்கனவே உயிரிழந்திருந்தது உறுதி செய்யப்பட்டது. குழந்தையின் உடலில் தொப்புள்கொடி கூட அகற்றப்படாத நிலையில் இருந்ததால், அது பிறந்து சில மணிநேரங்களே ஆன பச்சிளம் குழந்தை என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து வீரபாண்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்தக் குழந்தை பிறக்கும்போதே உயிரிழந்ததால் பயந்துபோய் வீசிச் சென்றார்களா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், குழந்தையைக் கைவிட்டுச் சென்ற நபர்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தற்போதைய சூழலில் மிகவும் பலம் வாய்ந்ததாகக் கருதப்படும்…
தமிழக அரசியலில் நீண்டகாலமாகத் தனித்துப் போட்டியிட்டு வரும் நாம் தமிழர் கட்சியைத் தங்கள் பக்கம் இழுக்க காங்கிரஸ் மற்றும் தமிழக…
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது விடுத்த…
சென்னையில் 'ஜெப்டோ' (Zepto) ஆன்லைன் டெலிவரி நிறுவனத்தின் பொருட்களை நூதன முறையில் மோசடி செய்த வாடிக்கையாளரை, டெலிவரி ஊழியர்கள் கையும்…
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர்…
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் 3000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டு வருகிறது.…