சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வரும் நிலையில் அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் அடுத்தடுத்து தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றார். சமீபத்தில் கரூர் விவகாரத்தில் சிக்கலில் இருந்த விஜய் அதிலிருந்து தற்போது மெல்ல மெல்ல மீண்டும் வந்து கட்சியை வலுப்படுத்தும் நோக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று முன்தினம் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதனையடுத்து மீண்டும் அரசியல் பணிகளில் களமிறங்கியுள்ளார். விஜய் அதிமுக, திமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்போவதில்லை என தவெக பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். இந்நிலையில், விஜய் தலைமையில் புதிய கூட்டணி ஒன்று உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி தேமுதிக, பாமக, அமுமுக, விசிக மற்றும் புதிய தமிழகம் போன்ற கட்சிகள் இணைய இருப்பதாக பேசப்படுகிறது.
