விஜய் டிவியில் ஒளிபரப்பாக கூடிய மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் நீயா நானா. பல வருடங்களாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார். மற்ற நிகழ்ச்சிகளுடன் ஒப்பிடும்போது இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஒவ்வொரு வாரமும் இந்த நிகழ்ச்சியில் புதிதாக ஏதாவது ஒரு தலைப்பு கொண்டே விவாதம் நடைபெறும். இப்படியான நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது இந்த வாரம் பட்டுப்புடவையை விரும்பும் பெண்கள் மற்றும் பட்டுப் புடவையை விரும்பாத இளம் பெண்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றுள்ளது. இதில் பெண் ஒருவர் தனக்கு பட்டுப்புடவை பார்த்து வாங்குவது சிரமம் எனவும் மற்றொருவர் பட்டுப் புடவை கட்டி என்னால் நடக்க முடியாது எனவும் கூறுகிறார். இதற்கு எதிராக இருந்த பெண் ஒருவர் தான் விசா வாங்குவதற்கு பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அதிக பயத்துடன் சென்றதாக கூறுகின்றார்.
தான் மிக அழகாக பட்டுப் புடவை கட்டிக் கொண்டு சென்ற நிலையில் அங்கு கேள்வி எதுவும் கேட்கவில்லை, என் புடவையை பார்த்து அழகாக இருப்பதாக மட்டுமே கூறினார்கள் என்று அந்தப் பெண் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்ட கோபிநாத் உடனே அமெரிக்கா விசா வாங்குவது எப்படி என்ற கேள்வியுடன் அந்த பெண்ணின் செயலை விவரித்துள்ளார். தற்போது அது தொடர்பான ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெங்களூருவின் கக்கடாசபுரா அடுத்த மல்லேஷ்பால்யா பகுதியில் உள்ள ஒரு காலி இடத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த கொட்டகையில், புதன்கிழமை காலை சுமார்…
உத்தரப் பிரதேச மாநிலம் பதோஹி மாவட்டம் ஞான்பூரில் உள்ள பல்வந்த் சிங் அரசு மருத்துவமனையில், சாதி பாகுபாடு மற்றும் தீண்டாமை…
சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர் தடத்தில் இயங்கி வரும் புறநகர் ரயிலில், பட்டப்பகலில் பயணியின் கைபேசியைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம்…
பஞ்சாப் மாநிலம் பாசில்பூர் மாவட்டத்தில் வட்டிப் பணத் தகராறு காரணமாக முதியவர் ஒருவர் கடத்தப்பட்டு, கட்டி வைத்து அடித்து கொடூரமாக…
LPU ஷாப்பிங் சென்டரில் அமைந்துள்ள 'O' மொபைல் கடையில் சமீபத்தில் நடந்த திருட்டு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள…
தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் நாராயணேகட் மண்டலத்திற்குட்பட்ட சாப்தா கே கிராமத்தைச் சேர்ந்த முங்கா நர்சாரெட்டி (88) மற்றும் அஞ்சம்மா…