திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த நசீர் ராஜா என்பவர், நேற்று முன்தினம் மாலை தனது ஆதரவாளர்களுடன் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அங்கு மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகனை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது தவெக கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்கள் சிலரும் அவருடன் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பு குறித்து நசீர் ராஜா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மாநகராட்சி ஆணையரை, மாநகரச் செயலாளர் மற்றும் வார்டு செயலாளர்களுடன் இணைந்து மரியாதை நிமித்தமாகச் சந்தித்ததாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும், திண்டுக்கல் மாநகரப் பகுதிகளில் உள்ள அனைத்து வார்டுகளிலும் கழிவுநீர் கால்வாய்களைத் தூர்வாரவும், தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றவும், பொதுமக்களுக்குத் தினந்தோறும் குடிநீர் வழங்கவும் கோரிக்கை மனு அளித்துள்ளதாகக் கூறியிருந்தார். இதற்கு ஆணையரும் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தங்களுக்கு உறுதி அளித்ததாக அவர் பதிவிட்டிருந்தார்.
நசீர் ராஜா தன்னை ‘தவெக மாநகரச் செயலாளர்’ எனக் குறிப்பிட்டு அந்தப் பதிவை வெளியிட்டிருந்த நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்து தவெக கிழக்கு மாவட்டச் செயலாளர் தர்மராஜ் நேற்று அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரைப் பயன்படுத்தியும், மாநகர மாவட்டச் செயலாளர் என்கிற அறிவிக்கப்படாத போலி பதவியைக் கூறிக்கொண்டும், திண்டுக்கல் அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள் மற்றும் கழகத் தோழர்களிடம் தேவையற்ற குழப்பங்களைச் சில நபர்கள் ஏற்படுத்தி வருகிறார்கள். மாநகர மாவட்டச் செயலாளர் என்ற பொறுப்பைத் தலைமைக் கழகம் இதுவரை யாருக்கும் அறிவிக்கவில்லை” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
மேலும், கட்சிக்கு விரோதமாகச் செயல்படும் இதுபோன்ற நபர்களை அரசு அலுவலர்கள், காவல் துறையினர், கட்சியின் நகர நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும் மாவட்டச் செயலாளர் தர்மராஜ் தனது அறிக்கையில் தாழ்மையுடன் கேட்டுக்கொண்டார். தலைமைக் கழகம் தராத ஒரு பதவியைத் தனக்குத் தானே நசீர் ராஜா சூட்டிக்கொண்டதும், அதனை மாவட்டச் செயலாளர் பகிரங்கமாக அறிக்கை விட்டு மறுத்திருப்பதும் திண்டுக்கல் தவெகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் கட்சியின் உட்கட்சிப் பூசலை வெட்டவெளிச்சமாக்கியுள்ளதால் தொண்டர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளித்த புகார்களின் பேரில் தமிழ்நாடு…
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வாடகை செலுத்த முடியாத நிலையில் இருந்த நபர் ஒருவர், ரூ.500 கள்ளநோட்டுகளை அச்சடித்ததாகக் கூறப்படும் சம்பவம்…
கேரள மாநிலம் கொச்சி சேரநல்லூர் பகுதியில், கூடுதல் அமர்வு நீதிபதி ஒருவரின் 17 வயது மகன் ஓட்டிச் சென்ற மெர்சிடிஸ்…
திரைப்படப் பின்னணிப் பாடகி சின்மயி, தான் திரையுலகில் பிரபலமாவதற்கு முன்பு தன் தாயாருடன் சேர்ந்து வாடகை வீடு தேடிய தருணங்களில்…
சென்னை திருவேற்காடு சுந்தரசோழபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள்களான பிரியங்கா மற்றும் பிரியதர்ஷினி ஆகிய இருவரும் 15 வயதுடைய…
பீகார் மாநிலம் கயாவில் உள்ள சந்தௌதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில், நிலத்தகராறு காரணமாக பெரும் கலவரம்…