தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே அதிமுகவில் நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வரும் நிலையில் முக்கிய நிர்வாகிகள் பலரும் கட்சியில் இருந்து அதிரடியாக விலகி வருகிறார்கள். சமீபத்தில் செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால் இபிஎஸ் மீது நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை பாஜகவில் சேர்த்துக் கொள்வீர்களா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், செங்கோட்டையனை எங்கள் கட்சிக்கு அழைப்பது நாகரிகமாக இருக்காது. அதிமுக இணைய வேண்டும் என ஆரம்பகாலத்தில் இருந்தே நான் கூறி வருகிறேன் என பதில் அளித்துள்ளார். இவருடைய இந்த பதில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…
தற்போது 49 வயதாகும் லிஸி ஜோன்ஸ் என்பவர், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தை டேவிட் டெரன்ஸ் பெத்திக்…
தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு முடிவுக்கு வரும் வகையில், பிளஸ் 2 தேர்வு…
அதிமுகவின் தற்போதைய பின்னடைவு மற்றும் வீழ்ச்சிக்கு எடப்பாடி பழனிசாமியின் தன்னிச்சையான செயல்பாடுகளே காரணம் என்று முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி கடுமையாகச்…