தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் தமிழில் ஐயா திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமான நிலையில் அதன் பிறகு சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து இவர் நடித்த பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்த நிலையில் ஏராளமான ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். குறிப்பாக நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருப்பார்.
அந்த திரைப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு வாடகை தாய் மூலமாக இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுக் கொண்டார். சமீபத்தில் இவர் ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இறுதியாக இவரது நடிப்பில் அன்னபூரணி திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் டுடே புகழ் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் LIC லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள திரைப்படத்தில் நயன்தாரா பிரதீப் ரங்கநாதனுக்கு அக்காவாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த படத்தை அறுபது கோடி பட்ஜெட்டில் லலித்குமார் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதில் அக்காவாக நடிக்க போகும் நயன்தாராவின் கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்துள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…
சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…
கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…