#image_title
தென்னிந்திய சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. ஐயா படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாரா அதன் பிறகு சந்திரமுகி படத்தில் ரஜினியுடன் நடித்ததன் மூலம் உடனே முன்னணி நடிகை அந்தஸ்தைப் பெற்றார்.
சிம்புவுடன் அவர் நடித்த வல்லவன் திரைப்படம் அவரை இளைஞர்களிடம் கொண்டு சேர்த்தது. அவருடனான காதல் மற்றும் முத்தக் காட்சிகள் இணையத்தில் வெளியானது எல்லாம் அவரைச் சுற்றி ஒரு சர்ச்சை வளையத்தை உருவாக்கின. அது அவரின் சினிமா கேரியருக்கு மிகப்பெரிய அளவில் உதவியது.
அதன் பின்னர் சிம்புவை பிரிந்த அவர் பிரபுதேவாவைக் காதலித்து அவரோடு ஒன்றாக வாழ்ந்தார். அப்போது பிரபுதேவாவுக்குக் கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருந்தன. ஆனாலும் அது தெரிந்தும் நயன்தாரா அவரைக் காதலித்தார். பிரபுதேவா, நயன்தாராவைத் திருமணம் செய்த்கொள்வதற்காக தன் மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார்.
இது சம்மந்தமாக அப்போது நயன்தாரா மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அதன்பின்னர் பிரபுதேவாவுடனான காதலும் பிரிந்து இயக்குனர் விக்னேஷ் சிவனைத் திருமணம் செய்துகொண்டு தற்போது நடிப்பிலும் குடும்ப வாழ்க்கையிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைக் குறித்து பல விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் கல்யாணமான ஒரு நபரை ஏன் காதலித்தேன் என்பதற்கு அவர் சொல்லியுள்ள காரணம் கவனம் ஈர்த்துள்ளது.
அவரின் பதில் “நான் இருக்கும் சினிமா தொழிலில் பலவிதமான உறவுகளை நான் பார்த்து வந்திருக்கிறேன். நிறைய இரண்டாவது திருமணங்களை கண்டிருக்கிறேன். ஒரே நேரத்தில் நிறைய உறவுகளில் இருப்பவர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களைத் தவறாக கூறவில்லை. அப்படித்தான் இந்த இன்டஸ்ட்ரி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனால் இப்படியான உறவுகள்(கல்யாணமான ஒருவரைக் காதலிப்பது) எல்லாம் தவறில்லை என்று நினைத்தேன்” எனக் கூறியுள்ளார். தன்னுடைய காதலுக்காக சினிமா இண்டஸ்ட்ரியே இப்படிதான் கூறுவது போல உள்ளது நயன்தாராவின் பதில்.
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நோய்டாவில், சாலையில் விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய நபர் ஒருவரைப் பெண்மணி…
பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களின் போது லூயிஸ் வியூட்டன் கடை மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது சமூக வலைதளங்களில் வைரலானது.…
அமெரிக்காவில் மிக அதிக சம்பளம் தந்த கார்ப்பரேட் மார்க்கெட்டிங் வேலையைத் துறந்து, நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் தொழிலை தொடங்கிய…
ஹைதராபாத்தின் மலாக்பேட் பகுதியில் உள்ள அக்பர் பாஹ் இடத்தில் பட்டப்பகலில் பரபரப்பான ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது. அங்கே நிறுத்தப்பட்டிருந்த…