மலையாள திரையுலகின் பிரபல இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளருமான கே.ஜி ஜார்ஜ்(77) இன்று காலை காலமானார். பிரபல இயக்குனர் ராமு கர்யாத்தின் “மாயா” திரைப்படத்தின் உதவியாளராக ஜார்ஜ் திரையுலகில் அறிமுகமானார். கடந்த 1975-ஆம் ஆண்டு கே.ஜி.ஜார்ஜ் “ஸ்வப்நதானம்” என்ற மலையாள திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இவர் இயக்கிய முதல் திரைப்படமே தேசிய திரைப்பட விருதை வென்றது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் பல்வேறு திரைப்படங்களுக்காக இவர் 9 கேரள மாநில திரைப்பட விருதுகளை வென்றுள்ளார். சுமார் 40 வருட தனது திரை வாழ்க்கையில் 19 படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார். மேலும் ஏராளமான படங்களுக்கும் ஜார்ஜ் திரைக்கதை எழுதியுள்ளார்.
மலையாள சினிமா தொழில்நுட்ப வல்லுனர்கள் சங்கத்தின் நிறுவனர், தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினராக இருந்தவர் ஜார்ஜ். இவர் கேரளா மாநில திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். வயது முதிர்வு காரணமாக கொச்சியில் இருக்கும் முதியோர் மையத்தில் வசித்து வந்த ஜார்ஜ் இன்று காலை அவர் உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…