நடிகை நயன்தாரா 20 வருடங்களுக்கும் மேலாக தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் இணைந்து நடித்தார். பான் இந்தியா படமாக வெளியான ஜவான் ஆயிரம் கோடி வசூலை நெருங்கி வருகிறது. அடுத்ததாக ரத்தினகுமார் இயக்கத்தில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவியுடன் நயன்தாரா இணைந்து நடித்த இறைவன் படம் வருகிற 28-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. தனி ஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியும் நயன்தாராவும் ஜோடி சேர்ந்துள்ள இறைவன் படத்தை ஐ.அகமது இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வில்லனாக ராகுல் போஸ் நடித்துள்ளார்.
மேலும் விஜயலட்சுமி நரேன், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இறைவன் படம் சைக்கோ திரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. இதனால் சென்சார் போர்டு படத்திற்கு A சான்றிதழ் அளித்தது.
வன்முறை காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக கூறப்படும் இறைவன் படம் குழந்தைகள் பார்ப்பதற்கு ஏற்றது அல்ல. A சான்றிதழ் அளிக்கும் அளவிற்கு அப்படி என்ன காட்சிகள் படத்தில் இருக்கும் என ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அதே நேரம் இறைவன் படத்தின் டிரைலர் யூட்யூபில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.
மதுரை பழங்காநத்தம் - காளவாசல் பைபாஸ் சாலைப் பகுதியில் அண்மையில் திறக்கப்பட்ட பிரபல நகைக்கடையின் புதிய கிளையில் சுமார் 21…
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…
சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…
கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…
தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…