“அமைச்சர் பதவிக்கு ரூ.100 கோடி பேரம்”… ஆளுநர்கள் மோடியின் ஏஜென்டுகள்… முன்னாள் முதல்வர் நாராயணசாமியின் பகீர் பேட்டி…!!

Spread the love

மத்திய அரசின் வினாத்தாள் கசிவு காரணமாக நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள புதுச்சேரி முன்னாள் காங்கிரஸ் முதல்வர் நாராயணசாமி, இத்தேர்வை முறையாக நடத்தத் தவறிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், மோடி அரசு நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்றும், புதுவையில் எக்காரணம் கொண்டும் பிரெஞ்சு மொழியைப் புகுத்தக் கூடாது என்றும், இருமொழிக் கொள்கையை மட்டுமே அங்கு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பிரதமர் மோடியின் ஏஜென்டுகளாகவே ஆளுநர்கள் செயல்படுவதாகக் குற்றம் சாட்டிய அவர், அதன் காரணமாகவே இங்கு வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதத்திற்குப் பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் அவலம் நிகழ்வதாகக் குறிப்பிட்டுள்ளார். பொதுவாக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என்றும், தற்போதைய ஆளுநர்களின் செயல்பாடுகள் அதற்கு மாறாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதுச்சேரியில் தற்போதைய புதிய ஆட்சியில் முதல்வர் மற்றும் இரண்டு அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்றுள்ள நிலையில், மீதமுள்ள மூன்று அமைச்சர்கள், சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிகளுக்கான தேர்வு இன்னும் இழுபறியாகவே நீடிப்பதாக நாராயணசாமி விமர்சித்துள்ளார். பொதுவெளியில் அமைச்சர் பதவிக்காக ரூ.50 கோடி முதல் ரூ.100 கோடி வரை பேரம் பேசப்படுவதாகவும், புதுவைக்குச் சம்பந்தம் இல்லாதவர்கள் எல்லாம் அமைச்சர் கனவோடு வலம் வருவதால் தான் இந்தத் தாமதம் என்றும் அவர் சாடியுள்ளார். அமைச்சரவை அமைக்கும் முன்பே இத்தனை கோடி ஊழல் பேரம் பேசப்பட்டால், இந்த ஆட்சி எப்படி இருக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Soundarya

Recent Posts

யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..! அம்மா உணவகத்திற்குள் நுழைந்த வீணா காயத்ரி… அங்கு நடந்தது என்ன..?!

புகழ்பெற்ற கர்நாடக இசை வீணை கலைஞரான வீணா காயத்ரி, சென்னை மந்தைவெளியில் உள்ள அம்மா உணவகத்திற்கு நேரில் சென்று உணவு…

4 minutes ago

திமுகவில் ஒட்டுமொத்தமாக மாறப்போகும் நிர்வாகிகள்?…. லிஸ்ட்டில் இருக்கும் டாப் தலைவர்கள்… ஸ்டாலினின் ‘ஆபரேஷன் க்ளீன்-அப்’…!

தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கட்சியின் மூத்த தலைவர்களான டி.ஆர்.பாலு, கனிமொழி மற்றும் திருச்சி…

5 minutes ago

“பெண்ணை கட்டிப்போட்டு அண்ணனும் தம்பியும் செய்த காரியம்.. செல்போனில் வீடியோ எடுத்த அவலம்.. ஆந்திராவில் அரங்கேறிய பயங்கர சம்பவம்”..!!

ஆந்திர மாநிலம் நகரிக்கல்லு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண், தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு 3 மகள்களுடன்…

8 minutes ago

BREAKING: திமுக -காங்., கூட்டணி… திடீர் திருப்பம்… தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு….!

ஜூன் 8-ஆம் தேதி நடைபெறவுள்ள 'இண்டியா' கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காது என்று அக்கட்சியின் தலைமை அதிரடியாக அறிவித்துள்ளது. கடந்த…

8 minutes ago

ஸ்வீடனிலிருந்து வந்த ஒரு கால்… ஆபத்தில் மயங்கிக் கிடந்த முதியவரை காப்பாற்றிய… மதுரை தீயணைப்பு வீரர்கள்..! நெட்டிசென்களின் மனதை நெகிழ வைத்த சம்பவம்…!!

மதுரை அண்ணா நகர் பகுதியில் தனியாக வசித்து வரும் முதியவர் ஒருவரை, ஸ்வீடனில் இருந்து வந்த அவசர அழைப்பின் பேரில்…

19 minutes ago

“‘ஐஸ் வைக்கிறதுக்கு ஒரு எல்லை இல்லையா?’.. பதவியேற்ற உடனே பக்தி அவதாரம்.. சிவபெருமானாக மாறிய டி.கே.சிவகுமார்.. கர்நாடகாவில் வெடித்த புது அரசியல் புயல்..!!

கர்நாடகாவில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த முதல்வர் நாற்காலிப் போட்டி ஒருவழியாக முடிவுக்கு வந்து, டி.கே. சிவகுமார் புதிய முதல்வராகப்…

20 minutes ago