பிரபல நடிகரான ரோபோ சங்கர் கலக்கப்போவது யாரு, அது இது எது என ஏராளமான காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார். இவர் அஜித், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படத்திலும் நடித்துள்ளார். மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதன் பிறகு உடல் நலம் தேறி மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.
யாரும் எதிர்பாராத விதமாக கடந்த செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதி ரோபோ சங்கர் உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் ரோபோ சங்கர் குறித்து பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நாஞ்சில் விஜயன், “இந்த விஷயத்தை பிரியங்கா அவர்களுடைய அனுமதி இல்லாமல் சொல்கிறேன். ரோபோ சங்கர் கலைமாமணி பட்டம் வாங்கியுள்ளார். அதற்காக ஒரு செயின் கொடுத்தார்கள். அதை சமீபத்தில் மூன்று லட்சம் ரூபாய்க்கு அடகு வைத்திருந்தார்கள். சங்கர் அண்ணன் இறந்ததும் அவருடைய நண்பர்கள் எல்லாம் சேர்ந்து அந்த செயினை மீட்டு குடும்பத்திடம் கொடுத்து இருக்கிறார்கள். அதை தன்னுடைய கழுத்தில் போட்டுக் கொண்டு பிரியங்கா அக்கா இனிமேல் அதுதான் என்னுடைய தாலி. எப்போதும் கழற்ற மாட்டேன் என்று கூறியிருக்கிறார்” என்று சொல்லியுள்ளார் நாஞ்சில்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…