“டெல்லியில் நடந்த ரகசிய மீட்டிங்”… 3 அமைச்சர் பதவி, 56 தொகுதிகள்… ஒரே போடாய் போட்ட நயினார் நாகேந்திரன்…!

Spread the love

அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி 56 தொகுதிகளையும், 3 அமைச்சர் பதவிகளையும் கோரியதாக வெளியான தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்ததைத் தொடர்ந்து, இத்தகைய யூகங்கள் அரசியல் வட்டாரத்தில் பரவின. குறிப்பாக, நயினார் நாகேந்திரன் அதிமுக தலைமையிடம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொகுதிகள் அடங்கிய பட்டியலை வழங்கியதாகச் செய்திகள் வெளியான நிலையில், அவர் தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், கூட்டணியில் தொகுதிப் பங்கீடு மற்றும் பிற கட்சிகளை இணைப்பது குறித்து அமித் ஷாவும் எடப்பாடி பழனிசாமியும் மட்டுமே இறுதி முடிவெடுப்பார்கள் என்று தெளிவுபடுத்தினார். மேலும், வரும் ஜனவரி 23-ஆம் தேதி கன்னியாகுமரியில் நடைபெறவுள்ள பாஜக மகளிர் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாகவும், அதற்கான அழைப்பிதழை எடப்பாடி பழனிசாமியிடம் நேரில் வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார். பிரதமர் மோடி பங்கேற்கும் மேடையில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் இடம்பெற வேண்டும் என்பதே தற்போதைய முக்கிய நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசியல் ரீதியான விமர்சனங்களைத் தொடர்ந்த நயினார் நாகேந்திரன், திமுக தலைமையிலான தற்போதைய தமிழக அரசு மக்களின் கனவுகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சாடினார். சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, ஊழல் மற்றும் போதைப்பொருள் புழக்கம் இல்லாத ஒரு தமிழகத்தை மக்கள் விரும்புவதாகவும், “திமுக இல்லாத தமிழகமே” மக்களின் உண்மையான கனவு என்றும் அவர் பதிவிட்டுள்ளார். அதிமுக-பாஜக கூட்டணி விரைவில் இறுதி செய்யப்பட்டு, வலுவான கூட்டணியாகத் தேர்தலைச் சந்திக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Nanthini

Recent Posts

பகீர் சிரிப்பு..! ரயில் நிலையத்தில் பயணிக்கு ‘பேன்’ பார்த்த குரங்கு.. வைரலாகும் வினோத வீடியோ..!!

ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டத்திற்கு நடுவே குரங்கு ஒன்று செய்த குறும்புத்தனமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் சிரிப்பலைகளை உருவாக்கி…

8 minutes ago

3 நாள் டைம்..! ஈரான் எல்லையில் அமெரிக்க ராணுவம் குவிப்பு…! 2003 ஈராக் போருக்குப் பின் நடக்கும் மிகப்பெரிய ஸ்கெட்ச்…!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத வகையில் தனது ராணுவ பலத்தைப் பெருக்கி வருகிறது. ஏற்கனவே…

10 minutes ago

பகீர்..! இந்தியா வந்த சரக்கு கப்பல்கள் மீது ஈரான் துப்பாக்கிச் சூடு: ஹார்முஸ் நீரிணையில் அதிரடி சிறைபிடிப்பு..!!

ஹார்முஸ் நீரிணை பகுதியில் நிலவி வரும் போர் பதற்றத்திற்கு இடையே, இந்தியா மற்றும் இலங்கைக்கு சரக்குகளை ஏற்றி வந்த இரண்டு…

14 minutes ago

ரூ.1 1/2 லட்சம் டிக்கெட் விலை…. ஒரு ஓட்டுக்காக ஸ்காட்லாந்தில் இருந்து கிளம்பிய விஜய் ரசிகை…! வைரல் வீடியோ…!

ஸ்காட்லாந்தில் வசிக்கும் தமிழக இளம்பெண் ஒருவர், தனது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து தமிழகம்…

17 minutes ago

விஜய்யோட பிள்ளைங்க வந்து “எங்க அப்பா பாத்துக்கலைன்னு குறை சொன்னாங்களா..?” பிரபல ஜோதிடர் ஓபன் டாக்..!!

நடிகர் விஜய் அரசியலில் களம் இறங்கி 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கியதில் இருந்து, அவருக்குப் பல்வேறு சவால்கள்…

17 minutes ago

BREAKING: ஈரான் போர்… இந்தியாவுக்கு அதிர்ச்சி… சற்றுமுன் உச்சக்கட்ட பதற்றம்….!

அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டிப்பதாக அறிவித்த சில மணிநேரங்களிலேயே, ஈரான் கடல் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ள…

53 minutes ago