38 வயதிலும் அதே இளமையோடு இருக்கும் நாடோடிகள் அனன்யா.. லேட்டஸ்ட் வீடியோவை பார்த்து வியந்த ரசிகர்கள்..!

Spread the love

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகை தான் அனன்யா. நாடோடிகள் திரைப்படம் மூலமாக தமிழில் அறிமுகமான மலையாள நடிகை. இந்த படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்களுக்கு பிடித்துப் போக அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தது. நாடோடிகள் திரைப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டது. இதனைத் தொடர்ந்து சீடன் மற்றும் எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மலையாள படங்களில் தொடர்ந்து நடித்து வரும் இவர் சமீப காலமாக தமிழ் திரை உலகின் பக்கம் தலை காட்டாமல் இருந்தார்.

தற்போது இவர் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள திரு மாணிக்கம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் டிசம்பர் 27ஆம் தேதி வெளியாக உள்ளது. மலையாளத்தில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் கோபி கிருஷ்ணாவின் மகள் தான் அனன்யா. இதனாலையே இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. திரில்லர் படங்களில் நடிப்பதற்கு பெயர் போனவர். இவர் மோகன்லாலுடன் ஷிக்கர் என்ற திரைப்படத்தில் சேர்ந்து நடித்திருந்தார்.

திரில்லர் காட்சிகளில் அனன்யா தைரியமாக நடித்ததால் மோகன்லால் இவரை மலையாளத்தின் விஜயசாந்தி என்று குறிப்பிட்ட சில இடங்களில் பேசினார். அனன்யாவின் உண்மையான பெயர் அயில்யா. திரை உலகிற்கு வந்த பிறகு தன் பெயரை அனன்யா என மாற்றிக்கொண்டார். இவர் இறுதியாக தமிழில் காட்பாதர் என்ற திரைப்படத்தில் 2020 ஆம் ஆண்டு நடித்திருந்தார். தற்போது திருமணிக்கம் திரைப்படத்தில் இவர் நடித்து முடித்துள்ள நிலையில் சமீபத்தில் இவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இதனை பார்த்த ரசிகர்கள் நம்ப நாடோடிகள் அனன்யாவா இது என்று கேட்டு வருகிறார்கள்.

 

Nanthini

Recent Posts

“இளம் வயதிலேயே கை நடுக்கமா? அலட்சியம் வேண்டாம்!… நரம்பியல் நிபுணர் எச்சரிக்கும் அந்த 8 முக்கிய காரணங்கள்… இதிலிருந்து தப்பிப்பது எப்படி?”

இளம் வயதிலேயே ஏற்படும் கை நடுக்கம் பலருக்கும் கவலையை ஏற்படுத்தினாலும், இது பெரும்பாலும் நமது வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும்…

2 minutes ago

கொலையா? தற்கொலையா? வீட்டிற்குள் பிணமாக மீட்கப்பட்ட பெண்… மணப்பெண்ணின் மர்ம மரணம் – பின்னணி என்ன..?

உத்தரப் பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டம் பில்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், திருமணமான இளம் பெண் ஒருவர் மர்மமான…

8 minutes ago

கண் இமைக்கும் நேரத்தில் நேர்ந்த கோரம்… விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மீது விழுந்த இரும்பு கேட்.. பதறவைக்கும் காட்சி..!

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள கெஜா கிராமத்தில், விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுவன் மீது கனமான இரும்பு கேட்…

8 minutes ago

“வேற சாதி பையனை கல்யாணம் பண்ணுறியா” 9 மாத கர்ப்பிணி என்றும் பாராமல் சுட்டுக்கொன்ற கொழுந்தன்.. நெஞ்சை பதறவைக்கும் பயங்கரம்..!

உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் சாதி மறுப்புத் திருமணத்தால் ஏற்பட்ட ஆத்திரத்தில், கர்ப்பிணிப் பெண்ணை அவரது கொழுந்தனே சுட்டுக்கொலை செய்துள்ள…

9 minutes ago

“உங்க ஹெல்மெட்டை பாதுகாக்க புது ஐடியா” இனி திருடர்கள் கிட்டயே நெருங்க முடியாது…வைரலாகும் ஹெல்மெட் பாதுகாப்பு வீடியோ..!!

இன்றைய காலக்கட்டத்தில் விலையுயர்ந்த ஹெல்மெட்கள் திருடப்படுவது ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. மக்கள் பாதுகாப்பிற்காக 1,500 முதல் 8,000 ரூபாய்…

9 minutes ago

மாறிவரும் பருவநிலை! பரவும் சளி, இருமல்… அஞ்சறைப் பெட்டியிலேயே இருக்கும் ‘மேஜிக்’ மருந்து… இனி ஆஸ்பத்திரிக்கு நோ சொல்லுங்க!

பருவநிலை மாற்றத்தின் போது ஏற்படும் சளி மற்றும் இருமல் போன்ற உபாதைகளுக்கு, நமது சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டி மசாலாப்…

12 minutes ago