தமிழ் சினிமா ரசிகர்களால் கடந்த 1980களில் கொண்டாடப்பட்டவர் நதியா. திருமணத்துக்கு பிறகு பல ஆண்டுகள் நடிக்காமல் இருந்த நதியா எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் நடிகர் ரவிமோகனுக்கு அம்மாவாக நடித்து தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார். தாமிரபரணி பட்டாளம் திரிஷியம் 2 என பல படங்களில் நதியா நடித்து வரவேற்பை பெற்றார். இப்போது நடிகை நதியாவுக்கு 59 வயது ஆகிறது. எனினும் அவர் இளமையான தோற்றத்தில் இப்போதும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை நதியா சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார். அங்கு ஹாலிவுட் நடிகை நிக்கோல் கிட்மேனை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். நான் அவருடைய ஃபேன் கேர்ள் ( தீவிரமான ரசிகை) என்றும் நடிகை நதியா தனது பதிவில் கூறியிருக்கிறார். ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸின் முன்னாள் மனைவி தான் நிக்கோல் கிட்மேன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவை பூர்வீகமாக கொண்டவர் நிக்கோல் கிட்மேன். நதியா அவருடன் போட்டோ எடுத்துக் கொள்ளும்போது அவருக்காக குனிந்து நிக்கோல் கிட்மேன் போட்டோவுக்கு போஸ் கொடுத்து இருக்கிறார். என்னைவிட 6 இன்ச் அவர் உயரமாக இருக்கிறார் என நதியா அந்த வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…