Categories: சினிமா

தனது வரிகளால் பாடலுக்கு சிறப்பு சேர்த்த நா.முத்துக்குமார்.. அவருக்கு பிடித்த பாடல்கள் என்னென்ன தெரியுமா..?

Spread the love

தமிழ் திரையுலகில் தனது திறமையால் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியவர் பாடலாசிரியர் நா.முத்துக்குமார். இவரது பாடல் வரிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். தங்க மீன்கள், சைவம் ஆகிய திரைப்படங்களில் இடம்பெற்ற பாடலுக்காக நா.முத்துக்குமாருக்கு தேசிய விருது கொடுக்கப்பட்டது.

இயக்குனர் சீமானின் வீரநடை என்ற திரைப்படத்தில் பாடல் எழுதியுள்ளார். இதனை தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் இடம் பெற்ற பாடலுக்கு நா. முத்துக்குமார் பாடல் வரிகளை எழுதியுள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு காய்ச்சல் முற்றிய நிலையில் 41 வயதில் நா.முத்துக்குமார் உயிரிழந்தார்.

ஒருமுறை நா.முத்துக்குமார் அளித்த பழைய பேட்டியில் நீங்களே எழுதிய பாடல்களில் உங்களுக்கு பிடித்த பாடல்கள் எது என தொகுப்பாளர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு நா.முத்துக்குமார் கூறியதாவது, எனக்கு பிடித்த பாடல்கள் என்னவென்றால் காதல் திரைப்படத்தில் இடம் பெற்ற உனக்கென நான் இருப்பேன் பாடல், 7ஜி ரெயின்போ காலனி படத்தில் இடம் பெற்ற கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை என்ற பாடல் பிடிக்கும்.

அடுத்ததாக காதல் கொண்டேன் படத்தில் இடம்பெற்ற தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என்ற பாடல், புதுப்பேட்டை படத்தில் இடம்பெற்ற  ஒரு நாளில் வாழ்க்கை இங்கே என்ற பாடல், மன்மதன் படத்தில் இடம் பெற்ற காதல் வளர்த்தேன் பாடல், வெயில் படத்தில் இடம்பெற்ற வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி என்ற பாடல்,  4 ஸ்டூடண்ட்ஸ் படத்தில் இடம் பெற்ற லட்சாவதியே என்ற பாடல், ரன் படத்தில் இடம் பெற்ற நேரடி வீதியில் தேவதை வந்தா ஆகிய பாடல்கள் மிகவும் பிடிக்கும் என நா.முத்துக்குமார் கூறியுள்ளார்.

admin

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

7 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

8 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

8 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

8 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

9 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

9 மணத்தியாலங்கள் ago