கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தம்மத்துகோணம் பகுதியில் உள்ள விஐபி கார்டனில் வசித்து வரும் பிரபல யூடியூப் தம்பதியான வினோத்குமார் – மதுமிதா வீட்டில், மர்ம கும்பல் புகுந்து 118 சவரன் தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த யூடியூப் தம்பதியினர் தங்களது வீட்டின் பேங்க் பேலன்ஸ், புதிதாக வாங்கும் நகைகள், விலை உயர்ந்த கார்கள் மற்றும் கட்டு கட்டாகப் பணம் வைத்திருக்கும் வீடியோக்களைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ரீல்ஸ் என்ற பெயரில் பதிவிட்டு வந்துள்ளனர். இதனால் இவர்களது நடமாட்டத்தையும், நகை மற்றும் பணப் புழக்கத்தையும் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து கண்காணித்து வந்த மர்ம கும்பல், நேற்று இரவு வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே புகுந்து கோடிக்கணக்கிலான நகைகளை அள்ளிச் சென்றுள்ளது.
அனைத்து வீடுகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் தனியார் பாதுகாவலர்கள் இருக்கும் ஆடம்பர விஐபி பகுதியில் இந்தத் துணிகரக் கொள்ளை நடந்துள்ளது பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து ராஜாக்கமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், யூடியூபர்களின் இந்த தேவையற்ற பந்தா வீடியோக்களே கொள்ளைக்குக் காரணம் என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…