Categories: சினிமா

என்னையும் அவளையும் சேத்து வச்சி பேசுனாங்க.. அந்த நாய் சாவுற வரைக்கும் நடிக்கணும்.. பிரபல நடிகையை பற்றி மிஸ்கின் சர்ச்சையான பேச்சு..

Spread the love

திரைப்பட இயக்குநர் மிஷ்கின் பல வெற்றிப்படங்களை தந்தவர். துப்பறிவாளன், அஞ்சாதே, சைக்கோ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தந்தவர்.சமீபத்தில் டெவில் படத்தின் பிரஸ்மீட் நடந்தது. இந்த படத்தின் இயக்குநர் மிஷ்கின் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது மேடையில் பூர்ணா, விதார்த் உள்ளிட்டோர் இருந்தனர். அப்போது மேடையில் மிஷ்கின் பேசியதாவது, 100 வருஷம் வாழ்கிற வாழ்க்கையில் நாம் பத்து பேரை சந்திப்போம். அதில் மகளாக, தாயாக, சகோதரி, மனைவியாக சில பெண்கள் வருவார்கள்.

ஆனால் எங்கிருந்தோ ஒருத்தி வேறொரு மனுஷி வருவாள். அன்பு காட்டுவாள். அப்படி ஒருத்தி தான் பூர்ணா. இவளை பார்க்கும்போதெல்லாம், அடுத்த ஜென்மத்துல இவ வயித்துல பிறக்கணுமுன்னு தோணும். என் படத்துல அவ இருக்கணும். அந்த நாய் சாகற வரைக்கும் நடிக்கணும். என்னையும் அவளை பத்தியும் சேர்த்து வெச்சு தப்பா பேசுவாங்க. அதைப்பத்தி எல்லாம் கவலை இல்லை. அவளுக்கு கல்யாணம் ஆனது ரொம்ப சந்தோஷமா இருந்தது.

இன்னும் 5 வருஷம் நடிச்சிட்டு அப்புறமா கல்யாணம் பண்ணியிருக்கலாமேன்னு சொல்ல தோணுச்சு. அவங்க கல்யாணம் பண்ணிட்டு துபாய் போயிட்டாள். இங்க இருந்தாலாவது அடிக்கடி போய் பார்க்கலாம். பூர்ணா ஒரு எக்ஸ்ட்ரானரி ஆக்டர். ஆக்டர் அப்படீன்னா, கற்பனையான ஒரு உலகத்துல, நிஜமா வாழணும் அதுதான் நடிப்புங்கறதுக்கு டெபனீஷியன்.

அப்படி சிறந்த நடிகையாக பூர்ணா இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று பேசியிருக்கிறார். என்னதான் பிடித்தமான நடிகையாக இருந்தாலும், நெருங்கிய நட்புக் கொண்டவராக இருப்பினும், ஒரு நடிகையை ஒரு மேடையில் மீடியா முன்பு, அந்த நாய் சாகற வரைக்கும் நடிக்கணும் என்ற வார்த்தையை மிஷ்கின் பயன்படுத்தியது தவறு என, பலரும் கடுமையான விமர்சனம் செய்து வருகின்றனர்.

admin

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

4 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

4 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

4 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

4 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

4 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

4 மணத்தியாலங்கள் ago