2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டசபை தேர்தலில், சென்னை மயிலாப்பூர் தொகுதியைக் கைப்பற்றுவதில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு முக்கிய கூட்டணிகளிலும் கடும் போட்டி நிலவி வருகிறது. திமுக கூட்டணியில், தற்போதைய எம்.எல்.ஏ த.வேலு மீண்டும் போட்டியிட விரும்பும் சூழலில், கடந்த தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற்ற மக்கள் நீதி மய்யம் இத்தொகுதியைத் தங்களுக்கு ஒதுக்கக்கோரி திமுகவிடம் வலியுறுத்தி வருகிறது. மநீம தரப்பில் மயிலாப்பூர் தங்களின் வெற்றி வாய்ப்புள்ள தொகுதியாகக் கருதப்படுவதால், தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது.
அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை, அதிமுக – பாஜக இடையே தொகுதிப் பகிர்வு குறித்து விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மயிலாப்பூரில் போட்டியிட ஆர்வம் காட்டி வரும் நிலையில், அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதிமுகவில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் மற்றும் வைகைச்செல்வன் ஆகியோர் இத்தொகுதியைக் குறிவைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், கூட்டணிக் கட்சிகளுக்குள் தொகுதியை யாருக்கு ஒதுக்குவது என்பதில் பெரிய அளவில் மல்லுக்கட்டு நடந்து வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…
புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் கொள்கை முழக்கத்தோடு கூடிய தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு அரசியல் களத்தில்…
தமிழக அரசியல் களம் 2026 சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கி அனல் பறந்து வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…