சமீபத்தில் மணிகண்டன் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் குடும்பஸ்தன். இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற மாணிக்சந்த் என்ற கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விட முடியாது. இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து இவர்தான் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். 90ஸ் கிட்ஸ் ஃபேவரைட் சீரியலான மை டியர் பூதம் சீரியலில் மூசா கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் இந்த அபிலேஷ். இவர்தான் குடும்பஸ்தன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், குடும்பஸ்தன் திரைப்படத்தில் நான் நடிக்கிற ஐடியாவே இல்ல. இந்தப் படத்தோட தயாரிப்பு நிறுவனத்தில் எக்ஸிக்யூட்டிவ் ப்ரொடியூசரா வேலை பார்த்துட்டு இருந்தேன்.
அந்த மாணிக்சந்த் கதாபாத்திரத்திற்கு நடிகர்கள் தேடிட்டு இருக்கும்போது டைரக்டர் பிரசன்னா சார்தான் என்ன பார்த்து நீங்க அந்த கதாபாத்திரம் நடிச்ச நல்லா இருக்கும் என்று சொன்னாரு. அப்போ வரைக்கும் நான் மை டியர் பூதம் மூஸா என்று யாருக்குமே தெரியாது. நாலாம் நடிக்கவே மாட்டேன்னு சொல்லிட்டேன். அதுக்கப்புறம் தயாரிப்பாளர் நீங்கதான் சின்ன வயசுல இருந்து நடிச்சிருக்கீங்களே இந்த படத்துல நடிங்க என்று சொன்னாரு. அப்படித்தான் நான் குடும்பஸ்தன் திரைப்படத்துக்குள்ள வந்தேன். நான் படிப்புக்காக தான் நடிப்பிலிருந்து இடைவெளி எடுத்து இருந்தேன். மீண்டும் சினிமாவுக்குள்ள வரும்போது ஆரிசார் நடித்திருந்த நாகேஷ் திரையரங்கம் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன்.
பிறகு தோனி கபடி குழு என்ற திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அதன் பிறகு ஒரு படத்தில் நான் நடிக்க கமிட்டானேன். அப்போ ஒருவர் இவனுக்கு என்ன மார்க்கெட் இருக்கு இவன வச்சு படம் பண்றீங்க என்ற தயாரிப்பாளர் கிட்ட சொன்னாரு. அந்தப் படம் அதுக்கப்புறம் டேக் அப் ஆகல. அந்த மார்க்கெட் என்ற வார்த்தை என்னை போட்டு உறுத்திக் கொண்டிருந்தது. சினிமாவுல மார்க்கெட் என்றால் என்ன என்று கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக தான் ப்ரொடக்ஷன் பக்கம் வந்தேன்.
முதன் முதலில் எனக்கு மை டியர் பூதம் திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்ததே மிகப்பெரிய போராட்டம் தான். எனக்கு நடிப்பு மீது அதிக ஆர்வம் இருந்தது. அப்போது நாங்கள் குடும்பத்துடன் திருச்சியில் இருந்தோம். வாரத்தின் இறுதி நாட்களில் ஸ்கூலுக்கு லீவு போட்டுட்டு சென்னைக்கு வந்து நானும் என்னுடைய அப்பாவும் வாய்ப்பு தேடுவோம். ஏவிஎம் ஸ்டுடியோஸ், விஜய வாகினி ஸ்டூடியோஸ் போன்ற இடங்களுக்கு போய் வாய்ப்பு கேட்டிருக்கும்.
அங்க இருக்கிற வாட்ச்மேன் எங்களை துரத்தியெல்லாம் இருக்காரு. அப்படி தேடிட்டு இருக்கும்போது எங்க அப்பாவுடைய ஒரு நண்பர் மூலமாகத்தான் எனக்கு மை டியர் பூதம் வாய்ப்பு கிடைத்தது. ஆடிஷன் போய் அதுக்கப்புறம் செலக்ட் ஆகி தான் மைடியர் பூதம் சீரியலில் மூஸா கதாபாத்திரத்தில் நடித்தேன். அதுதான் இன்னைக்கு வரைக்கும் என்னுடைய அடையாளமா இருக்கு. தற்போது மீண்டும் குடும்பஸ்தன் திரைப்படம் மூலமாக மற்றொரு அடையாளம் எனக்கு கிடைத்துள்ளது என்று அபிலாஷ் பேசியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் கொள்கை முழக்கத்தோடு கூடிய தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு அரசியல் களத்தில்…
தமிழக அரசியல் களம் 2026 சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கி அனல் பறந்து வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
மத்திய அரசு கொண்டு வர உள்ள தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மூன்று முக்கிய திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக…
தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகியாக இருந்த அஜிதா ஆக்னல், அக்கட்சியிலிருந்து விலகி அண்மையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 68 வயது முதியவர் ராஜூ, கடந்த 2021-ஆம் ஆண்டு…