#image_title
ராமசாமி கணேசன் என்ற இயற்பெயரை கொண்ட ஜெமினி கணேசன் தமிழ் சினிமாவின் மூத்த நடிகரும் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் இருந்தவர். காதல் திரைப்படங்களில் மிகச்சிறப்பாக நடித்ததால் இவர் அந்த காலத்தில் காதல் மன்னன் என்று அழைக்கப்பட்டார். எம்ஜிஆர் சிவாஜி கணேசன் போன்றவர்களுக்கு இணையாக ஜெமினி கணேசன் போற்றப்பட்டார். சிவாஜி கணேசன் நாடக திரைப்படங்களில் சிறந்து விளங்கினார், எம்ஜிஆர் ஆக்சன் திரைப்படங்களில் பிரபலமாக இருந்தார், ஜெமினிகணேசன் தனது காதல் திரைப்படங்களால் புகழ் பெற்றார்.
ஆரம்பத்தில் ஜெமினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவன நிர்வாகியாக பணிபுரிந்த காரணத்தால் இவரது பெயருக்கு முன்பு ‘ஜெமினி’ என்ற பெயர் சேர்த்து ஜெமினி கணேசன் என்று அழைக்கப்பட்டார். 1947 ஆம் ஆண்டு ‘மிஸ் மாலினி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 1953 ஆம் ஆண்டு ‘தாய் உள்ளம்’ என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தாலும் ஜெமினி கணேசன் 1954ஆம் ஆண்டு வெளியான வெற்றி திரைப்படம் ஆன ‘மனம் போல் மாங்கல்யம்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நட்சத்திர அந்தஸ்தை பெற்றார். தமிழ் சினிமாவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ஜெமினி கணேசன் தனது நடிப்பிற்காக ‘கலைமாமணி’, ‘எம்ஜிஆர் தங்கப்பதக்கம்’, ‘திரை வாழ்நாள் சாதனையாளர் விருது’ உள்ளிட்ட பல விருதுகளை வென்றவர். அன்றைய காலகட்டத்தில் திரையுலகில் நுழைந்த சில கல்லூரி பட்டதாரிகளில் ஜெமினி கணேசன் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக இருந்த போதிலும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல பெண்களுடன் இணைத்து பேசப்பட்டு சர்ச்சையில் சிக்கியவர் ஜெமினி கணேசன். முதல் மனைவி இருந்த போதிலும் பிரபல இந்திய நடிகை ஆன சாவித்திரியை திருமணம் செய்து கொண்டது பேசு பொருளாக ஆனது. இது தவிர பல பெண்களுடன் ஜெமினி கணேசனுக்கு தொடர்பு இருந்துள்ளது என்ற வதந்திகளும் அந்த காலகட்டத்தில் பரவிக் கொண்டிருந்தன.
ஜெமினி கணேசன் அவர்களின் முதல் மனைவியின் பெயர் அலமேலு என்பதாகும் அலமேலுவுக்கு நான்கு மகள்கள் ரேவதி- நடிகை, கமலா மற்றும் ஜெயலட்சுமி-மருத்துவர்கள், நாராயணி-பத்திரிகையாளர் ஆவர். ஜெமினி கணேசன் புஷ்பவல்லி என்பவரை மணந்து கொண்டு அவர்களுக்கு பாலிவுட் நடிகை ரேகா மற்றும் ராதா என்ற இரு மகள்கள் உள்ளனர். ஜெமினி கணேசன் சாவித்திரியை திருமணம் செய்த பிறகு அவர்களுக்கு ஒரு மகள் ஒரு மகன் பிறந்தனர் . அது விஜய சாமுண்டீஸ்வரி மற்றும் ஜெமினி கணேசனின் ஒரே மகன் சதீஷ்குமார் ஆவார். தன் வயது முதிர்ந்த போதிலும் நான்காவதாக ஜூலியான ஆன்ட்ரூ என்ற பெண்ணை 1998 ஆம் ஆண்டு நான்காவதாக திருமணம் செய்து கொண்டார் ஜெமினி கணேசன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெமினி கணேசனுக்கும் சாவித்திரிக்கும் பிறந்த விஜய சாமுண்டீஸ்வரி என்ற மகளின் மகனான அபிநவ் விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெமினி கணேசன் அவர்களின் மகளான மருத்துவர் கமலா சமீபத்திய நேர்காணலில் தனது தந்தையை பற்றிய விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ளார். அவர் கூறியது என்னவென்றால் என் தந்தை யாரையும் காதலிக்கவில்லை. அவர் அப்படிப்பட்ட மனிதரும் கிடையாது. அவரைத் தான் பெண்கள் எல்லோரும் துரத்தி வந்து காதலித்தார்கள். அதற்கு காரணம் என் தந்தை அழகாகவும், கவர்ச்சியாகவும், படித்தவராகவும் இருந்ததால் தான் அவரை தேடி அனைவரும் வந்தனர் என்று ஓபனாக பகிர்ந்துள்ளார் கமலா.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…