தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், அவர் நாளை மறுநாள் முதல்-அமைச்சராகப் பதவியேற்க உள்ளார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தொடர்ந்து, தம்பி விஜய் தலைமையிலான புதிய அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தங்களது கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், தம்பி விஜய்யின் ஆட்சி தமிழ்நாட்டின் உயர்வுக்காகச் சிறப்பாக அமைய வேண்டும் என வாழ்த்தியுள்ளார்.
மேலும், தனது வாழ்த்துச் செய்தியில் தமிழகத்தின் நலனுக்காகவும், மண்ணுக்கும் மக்களுக்குமான உரிமைகளுக்காகவும் நாம் தமிழர் கட்சி தொடர்ந்து களப்பணியாற்றும் என்று சீமான் உறுதிபடக் கூறியுள்ளார். ஆக்கப்பூர்வமான மாற்று அரசியலை முன்னெடுக்கும் ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகச் சட்டப்பேரவையிலும், வெளியிலும் தனது கட்சி செயலாற்றும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். விஜய்யின் அரசியல் வருகை மற்றும் வெற்றியின் மூலம் தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தை ஆரோக்கியமான போட்டியாகச் சீமான் வரவேற்றுள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும்…
தமிழக அரசியல் களத்தையே அதிர வைக்கும் விதமாக, கொளத்தூர் தொகுதியில் மூன்று முறை தொடர் வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலின், இந்த…
பெங்களூருவில் தனது 2.5 வயது மகனை அவனது தாயே 5 லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டதாகத் தந்தை புகார் அளித்துள்ள சம்பவம்…
சமூக வலைதளங்களில் ஒரு கோடீஸ்வரரின் மகளான அன்னா லிண்டே பகிர்ந்த வீடியோ தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. மியாமியைச் சேர்ந்த…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், 59 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஏகபோக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, நடிகர் விஜய்யின் தமிழக…
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரிகள், தங்களது கணவர்களைப் பரஸ்பரம் மாற்றிக்கொள்ள முடிவெடுத்து நீதிமன்றத்தை…