#image_title
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல தொடரான சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் சத்யா போன் செய்து மீனாவை தன்னுடைய பிறந்தநாளுக்கு கோவிலில் கூழ் ஊற்ற வருமாறு கட்டாய படுத்துகிறான். மீனா முத்து தன்னை போக வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறாள். அப்போது அங்கு வந்த ஸ்ருதி மீனாவிடம் ஏன் இப்படி dullஆ இருக்கிறீர்கள் என்று கேட்கிறாள்.
அதற்கு மீனா என்னுடைய தம்பியோட பிறந்தநாள் இன்று கோவிலில் கூழ் ஊத்துவதாக வேண்டிக் கொண்டு இருந்தோம். இப்போ என் தம்பி போன் பண்ணி நான் கூப்பிட்டுக்கிட்டே இருக்கான். ஆனா என் வீட்டுக்காரருக்கும் தம்பிக்கும் தான் ஆகாதே, அவர் போக வேண்டாம்னு சொல்லிட்டு போயிட்டாரு .அதான் என்ன செய்யணு தெரியாம உக்காந்துட்டு இருக்கேன் என்று சொல்கிறாள். உடனே சுருதி இதுல என்ன தப்பு இருக்கு மீனா உங்க தம்பியோட பிறந்தநாளுக்கு தானே நீங்க போறீங்க இன்னைக்கு நீங்க அவர் கூட இருக்க தானே செய்யணும் அப்படின்னு சொல்றாங்க. அவர் பேச்சை மீறி எப்படி போறது அப்படின்னு மீனா கேக்குறாங்க. அதுக்கு சுருதி இது என்ன அவ்வளவு பெரிய விஷயமா நீங்க என்ன முத்துகிட்ட வேலை பாக்குறீங்களா இல்ல அடிமையா? அவர் வேலைக்கு போய் இருக்காருல்ல அவர் போயிட்டு வரதுகுள்ள நீங்க போயிட்டு உங்க தம்பி பர்த்டேல கலந்துகிட்டு வந்துடுங்க அப்படின்னு சொல்றாங்க இதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது.
#image_title
இன்றைய எபிசோடில் மீனா சுருதி சொல்வதும் சரியாகத்தான் இருக்குது என்று நினைத்துக்கொண்டு கிளம்பி கோவிலுக்கு செல்கிறாள். அங்கு மீனாவுக்காக காத்திருந்த சத்யா மிகவும் சந்தோஷப்பட்டு அனைவரும் இணைந்து கூழ் சமைத்து கோயிலில் அனைவருக்கும் கொடுக்கிறார்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கிறது. அதற்குள் இங்கே வீட்டுக்கு வந்த முத்து மீனாவை தேடுகிறான்.
அப்போது அங்கு வந்த விஜயா உன் பொண்டாட்டி மீனா உன் சொல் பேச்சை கேட்காம அவ தம்பி பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு போயிட்டா என்று கூறி ஏத்தி விடுகிறார். முத்து இருந்தாலும் நம்பவில்லை மீனா போயிருக்க மாட்டா என்று சொல்லுகிறான். உடனே விஜயா உனக்கு சந்தேகமா இருந்தா நீயே கோயில்ல கூழ் ஊத்துற இடத்துல போய் பாத்துக்கோ என்று சொல்கிறாள். உடனே கோபத்துடன் அங்கிருந்து கிளம்புகிறான் முத்து.
கோயிலுக்கு போய் பார்க்கின்ற முத்து அதிர்ச்சி அடைகிறான். மீனா குடும்பத்துடன் கூழ் ஊற்றிக் கொண்டிருக்கும் இடத்திற்கு சென்று கோபமாக டம்ளரில் இந்த கூழ் ஊத்துறாங்கன்னு சொன்னாங்க எனக்கும் கூழ் கொடுங்க அப்படின்னு கேட்கிறான். ஏங்க இப்படி பேசுறீங்கனு மீனா கேட்கிறாள். இல்லை என் பொண்டாட்டி மீனானு ஒருத்தி இருந்தா. அவ புருஷன் மேல தான் பாசமா இருப்பானு நினைச்சேன் ஆனா அவ புருஷன் இல்ல தருதலையா சுத்துற தம்பி மேல தான் அதிக பாசமா இருக்கா. அத நான் தெரிஞ்சுகிட்டேன் அப்படின்னு சொல்லிட்டு கோவமா அங்கிருந்து கிளம்பிடுறான்.
உடனே மீனாவும் கிளம்பி வீட்டுக்கு வந்து விடுகிறாள். வீட்டுக்கு வந்ததும் சுருதியை பார்க்கிறாள். சுருதி மீனா விடம் என்ன மீனா உங்க தம்பி பர்த்டேக்கு போயிட்டு வந்துட்டீங்களா அப்படின்னு கேட்கிறார். அப்போ மீனா ஆமாங்க நான் போனேன். ஆனா அவரு அந்த இடத்துக்கு என்னை தேடி வந்துட்டாரு அப்படின்னு சொல்றா. உடனே ஸ்ருதி அவருக்கு எப்படி விஷயம் தெரிஞ்சது என்று கேட்கிறார். அத்தை சொல்லி கொடுத்திருக்காங்க அப்படின்னு மீனா சொல்கிறாள். இந்த ஆன்ட்டிக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை என்று சொல்லி கோபப்பட்டு முத்து கோபமா இருக்காரா? அப்படின்னு கேட்கிறார் சுருதி. மீனா தெரியலங்க அவர் வீட்டுக்கு வந்தா தான் தெரியும் என்று சொல்கிறார்.
#image_title
பின்னர் அன்று இரவு முத்து குடித்துவிட்டு வீட்டுக்கு வருகிறார். மீனா முத்துவிடம் கொஞ்ச நாள் குடிக்காமல் நல்லபடியா இருந்திங்களே இப்ப எதுக்கு இப்படி குடிச்சிட்டு வந்திருக்கீங்க என்று கேட்கிறாள். முத்துவோ இவ்ளோ நாள் எனக்காக என் பொண்டாட்டி ஒருத்தி இருந்தா இப்ப தான் எனக்குன்னு யாருமே இல்லையே என்று சொல்கிறான். மீனா ஏங்க என் தம்பி பிறந்தநாளுக்கு போறது ஒரு தப்பா, அவன் அப்பா இல்லாத பையன் உங்ககிட்ட சண்டை போடவோ வாக்குவாதம் செய்யவும் எனக்கு தெம்பு இல்ல என்ன மன்னிச்சிடுங்க என்று சொல்கிறாள் மீனா. உடனே முத்து என் பேச்சை கேட்காம நீ போயிட்ட. அது எனக்கு எவ்ளோ அசிங்கமா இருந்தது தெரியுமா இனிமே என்கிட்ட நீ எதுவும் பேசாதே என்று சொல்லி போய் தூங்கி விடுகிறான். உடனே அங்கு வந்த விஜயா இப்பதான் எனக்கு மனசுக்கு சந்தோஷமா இருக்கு. என்னடா ரொம்ப நாள் குடிக்காம இருந்தானே அப்படின்னு நினைச்சேன் இப்போ குடிச்சிட்டு வந்துட்டான். இப்பயாவது உன்னை பத்தி அவன் தெரிஞ்சுக்கிட்டான் என்று மீனாவை காயப்படுத்தும் படி பேசிவிட்டு சென்று விடுகிறார். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…