தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா, புனித மெக்காவுக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு வெள்ளை உடையில் தலையை மொட்டையடித்துக் கொண்டு சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபட்ட அவர், இது தொடர்பான வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது தமிழக அரசியல் வட்டாரத்திலும் சோஷியல் மீடியாவிலும் பெரும் கவனத்தைப் பெற்று வருகிறது.
அந்த வீடியோ பதிவில் பேசிய முஸ்தபா, இந்தியாவில் வாழும் அனைத்து மக்களிடையேயும் சாந்தியும் சமாதானமும் நிலவ வேண்டும் என இறைவனிடம் வேண்டியதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில் ஏழை, எளிய சாமானிய மக்களின் நலனுக்காகச் செயல்பட்டு வரும் முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சி சிறப்பாகத் தொடர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வரும் முதலமைச்சர் விஜய்க்கு நீண்ட ஆயுளும், நல்ல உடல் ஆரோக்கியமும், மன அமைதியும் கிடைக்க வேண்டும் என மெக்காவில் பிரார்த்தித்ததாக முஸ்தபா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். அத்துடன் உலகம் முழுவதும் அமைதியும் நல்லிணக்கமும் தழைக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் அவர் அந்தப் பதிவில் பதிவு செய்துள்ளார்.
சமீபத்தில் தவெக ஆட்சியைக் கவிழ்க்க குதிரை பேரம் பேசப்பட்டதாக முஸ்தபா அளித்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு எதிராக வாக்களிக்க ரூ.30 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக அவர் குற்றம்சாட்டியதன் பேரில் அதிமுக நிர்வாகி பி.எம். மன்னன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய அரசியல் சுழலுக்கு மத்தியில், முஸ்தபா மெக்காவில் மொட்டையடித்துச் செய்த பிரார்த்தனை வீடியோ தீவிரமாகப் பரவி வருகிறது.
பண்டிகை நாள்கள் மற்றும் அதற்கு முந்தைய நாள்களில் மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கத் தமிழக…
ஸ்பெயினைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரான ஜெசிகா முனோஸ் பரேடஸ் மற்றும் பெலாயோ அல்வாரெஸ் ரெவூல்டா ஆகியோர், ஒருவருக்கொருவர் கைவிலங்கு அணிந்தபடி…
குவஹாத்தி செல்லும் ரயிலில் பயணம் செய்த அமித் அவஸ்தி என்ற பயணி, தனது உணவில் பாதிக்கு மேல் சாப்பிட்ட பிறகு…
அசாம் ரயில் விபத்து நிகழ்வதற்குச் சற்று முன்பு, ரயில் இன்ஜின் அறைக்குள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.…
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்திய மக்கள் தொகை கணக்கீட்டு பலகையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…
மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டம் பன்வெல் அருகே உள்ள களம்போலி பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு காவல்துறையினர் வழக்கமான 'நாகாபந்தி'…