நடிகர் விஜய் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. சென்சார் சிக்கல்களால் திரையரங்குகளில் வெளியாகத் தாமதமான நிலையில், கடந்த ஏப்ரல் 9 மற்றும் 10 தேதிகளில் இப்படத்தின் காட்சிகள் மற்றும் முழுத் திரைப்படம் இணையத்தில் கசிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் இஸ்லாமிய சமூகத்தினரைத் தவறாகச் சித்தரிப்பதாகக் கூறி, தமிழக வெற்றிக் கழகத்திற்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாக முஸ்லிம் மக்கள் கழகம் அதிரடியாக அறிவித்துள்ளது.
முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவன தலைவர் ச.சு. ஜைனுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜனநாயகன்’ படத்தில் இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக, வெடிகுண்டு வைக்கும் கதாபாத்திரத்திற்கு இஸ்லாமியத் தோற்றம் அளிக்கப்பட்டிருப்பதும், அந்த நபரை ‘பாய்’ என அழைக்கும் வசனங்களும் உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்களின் உணர்வுகளைக் காயப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்து – முஸ்லிம் சகோதரர்களிடையே பிளவை ஏற்படுத்தும் வகையில் இக்காட்சிகள் அமைந்துள்ளதால், விஜய் தலைமையிலான தவெக-வை ஆதரிப்பதில்லை என்ற முடிவை அக்கட்சி எடுத்துள்ளது.
விழுப்புரம் வடக்கு மாவட்ட தவெக நிர்வாகி எஸ்.சக்திவேல் கோரிக்கையை ஏற்று, ஏற்கனவே அக்கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக முஸ்லிம் மக்கள் கழகம் தெரிவித்திருந்தது. ஆனால், தற்போதைய சூழலில் அந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாகவும், இஸ்லாமிய மக்கள் யாரும் விஜய்யின் கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் ஜைனுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். விஜய்க்கு விழும் வாக்குகள் தேர்தல் முடிவுகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது என்றும், சிறுபான்மையினரின் நலன்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக அல்லது அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஏற்படக்கூடிய அரசியல் மாற்றங்கள் குறித்தும் ஜைனுதீன் கவலை தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்களுக்கான 3.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுதல், பொது சிவில் சட்டம் அமலாக்கம், ஹிஜாப் தடை மற்றும் மத ரீதியான பதற்றங்கள் அதிகரிப்பது போன்ற சூழல்கள் உருவாகலாம் என்ற அச்சத்தையும் அவர் முன்வைத்துள்ளார். சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்பதால், அரசியல் ரீதியாக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள காரையூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நாகராஜ் என்பவரின் 15 வயது மகன் அஸ்வின்,…
தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் வேளையில், அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடைந்து எதிர்க்கட்சி வரிசையில்…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக (TVK) ஆட்சி அமைந்துள்ள நிலையில், எதிர்வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மகளிர் உரிமைத்தொகையை 2,500 ரூபாயாக…
தமிழக அரசியல் களத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையேயான மோதல் தற்பொழுது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில்…
தமிழ்நாடு பாஜகவின் முகமாக அறியப்பட்ட அண்ணாமலை, அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அதிரடியாக விலகியிருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் அடுத்தடுத்து…