தனது இரண்டாவது மனைவியுடன் திருமண நாளை சிறப்பாக கொண்டாடிய இசையமைப்பாளர் டி இமான்… வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படம்…

By Begam on வைகாசி 15, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் டி இமான். இவர் பல வெற்றி படங்களுக்கு இசையமைத்து அசத்தி வருகிறார். அந்த வகையில் தல அஜித் நடித்த ‘விசுவாசம்’ படத்தில் இவர் இசையில் வெளியான ‘கண்ணான கண்ணே’ மற்றும் அந்த படத்தில் வந்த அனைத்து பாடல்களுமே சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்றது.

   

இதைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படத்திற்கு இசையமைத்தார். டி இமான் அவர்கள் விஜய் நடிப்பில் 2002ல் வெளியான ‘தமிழன்’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தற்பொழுது முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டுள்ளார்.

   

 

பல அறிமுக பாடகர்களுக்கு வாய்ப்பு அளித்த அவர்களை பின்னணி பாடகர்களாக  மாற்றியவர் டி இமான். ‘விசுவாசம்’ திரைப்படத்தில் இவருடைய இசைக்காக தேசிய விருது வழங்கப்பட்டது. இவர் சமீபத்தில் ‘வள்ளி மயில் ,மலை’ போன்ற படங்களுக்கு இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளர் டி இமான் 2008ல் மோனிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இவர்  சட்ட ரீதியாக தனது மனைவியை பிரிந்து விட்டார். இதைத்தொடர்ந்து இவர் அமளி என்பவரை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு தற்பொழுது ஒரு மகளும் உள்ளார். இந்நிலையில் தனது திருமண நாளை இன்று இசையமைப்பாளர் டி இமான் சிறப்பாக கொண்டாடி உள்ளார். தற்பொழுது இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.