Categories: சினிமா

அந்த பாட்ட நான் பாடுனதால என் குடும்பத்துக்குள்ள பெரிய சண்டையே வந்துடுச்சு… தேவாவை திட்டிய அவரது மாமியார்!

Spread the love

தமிழ் சினிமாவில் 90 களில் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசை ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருந்த போது தனி வழியில் சென்றவர்தான் தேனிசைத் தென்றல் தேவா. விஜய், அஜித், சூர்யா, ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களொடும், பாலச்சந்தர், பாரதிராஜா, வசந்த் என முன்னணி இயக்குனர்களோடும் பணியாற்றி பல ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார்.

சமீபகாலமாக படங்களுக்கு இசையமைக்காமல் இருந்த தேவா இப்போது மீண்டும் அறம் கோபி இயக்கும் ஒரு படத்துக்கு இசையமைக்க கமிட்டாகியுள்ளார். தேவாவின் சினிமா வாழ்க்கையில் அவர் ரஜினிக்காக இசையமைத்த அண்ணாமலை மற்றும் பாட்ஷா ஆகிய இரு படங்களும் மைல்கல்லாக அமைந்தன. அதுவரை ரஜினி – இளையராஜா காம்பினேஷன் வெற்றிக்கொடி நாட்டி வந்த நிலையில் தேவா ரஜினி படங்களுக்கு தன்  இசையால் புத்துயிர் ஊட்டினார்.

2000 களுக்குப் பிறகு இசையின் வடிவம் மாறியதாலும் புது இசையமைப்பாளர்கள் அறிமுகத்தாலும் தேவா மெல்ல மெல்ல வாய்ப்புகளை இழந்து ஓரம் கட்டப்பட்டார். பல ஆண்டுகள் காணாமல் போயிருந்த தேவா தற்போது சில படங்களுக்கு மீண்டும் இசையமைக்க ஆரம்பித்துள்ளார். அதில் அறம் இயக்குனர் கோபி நயினார் இயக்கும் படமும் ஒன்று.

தேவா தன்னுடைய பாடல்களை சூப்பர் ஹிட்டாக கொடுத்தது போல தனது நேர்காணல்களிலும் அட்டகாசமாகப் பேசி ரசிகர்களைக் கவரும் திறன் கொண்டவர். அப்படி ஒரு நேர்காணலில் அவர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் ஒன்றை இப்போது பார்க்கலாம். இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய அவர் “நான் ஒரு படத்தில் ஒரு பாடலை பாடினேன். அது கொஞ்சம் இரட்டை அர்த்த வசனம் உள்ள பாட்டு. அதில் மாமன் காரன் மாப்பிள்ளையிடம் ‘சின்ன பொண்ணு வேணுமா மாப்ள.. பெரிய பொண்ணு வேணுமா மாப்ள..” என்று கேட்பான், அதற்கு மாபிள்ளை “சின்ன பொண்ணும் வேணாம் மாமா… பெரிய பொண்ணும் வேணாம் மாமா… அத்த மட்டும் போதும் மாமா” என்பான்.

இந்தப் பாடலை என் மாமியார் கேட்டுவிட்டு ‘எப்படி இந்த மாதிரி நீங்கள் பாடலாம்” என்று சண்டை போட்டார்கள். நான் என்ன பண்ணுவது சினிமாவில் பாட சொல்கிறார்கள் பாடுகிறேன். அது அவருக்குத் தெரியவில்லை” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

“தம்பி இதெல்லாம் தப்பு டா…” அப்பார்ட்மெண்ட்டில் சைக்கிளை ஆட்டையை போட்ட 12 வயது சிறுவன்… வைரலாகும் ஷாக்கிங் CCTV வீடியோ….!!

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளை, வெறும் 12 வயதே நிரம்பிய சிறுவன் ஒருவன் எவ்வித பயமும் இன்றி நைஸாகத்…

2 மணத்தியாலங்கள் ago

டேபிள் ஃபேன் வடிவில் வந்த எமன்…! மனைவியை காப்பாற்ற முயன்ற 80 வயது கணவர்…. நொடியில் நடந்த அசம்பாவிதம்…. கதறும் குடும்பத்தினர்….!!

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் தேவருகொண்டா பகுதியில் உள்ள அஞ்சையா காலனியைச் சேர்ந்தவர் தாவூத் மியா (80). இவரது மனைவி…

3 மணத்தியாலங்கள் ago

பாத்ரூமில் ரத்த வெள்ளத்தில்…! “பக்கத்து வீட்டுகாரர் தான் கரணம்…” நர்சிங் மாணவி மர்ம கொலை…. கதறி துடித்த தாய்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம் ஜூலூருபாடு மண்டலம் வெங்கனாபாலையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிணி (18). கம்மமில் உள்ள தனியார்…

3 மணத்தியாலங்கள் ago

தில்லாலங்கடி வேலை…! “நகையை எடுக்க மறந்த மதிப்பீட்டாளர்…” நியூஸ் பேப்பரில் மறைத்து அபேஸ் செய்த நபர்… வைரலாகும் ஷாக்கிங் CCTV காட்சிகள்…!!

ஆந்திர மாநிலம் திருப்பதி கிராமப்புற காவல் எல்லைக்குட்பட்ட அவிலாலா பகுதி ஆந்திரா கிராமீணா வங்கியில் பெண் ஒருவர் தான் அடமானம்…

3 மணத்தியாலங்கள் ago

“மனைவி, 2 பூசாரிகளை சுட்டு…” மூத்த மகளை பிணையாக வைத்து 3 பிள்ளைகளுடன் பதுங்கிய சைக்கோ தந்தை…. பரிதாபமாக இறந்த மகன்…. பகீர் சம்பவம்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆசாம்கர் மாவட்டத்தில் உள்ள ஷம்பூபூர் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் சிங் என்பவர் நேற்று மாலை தனது…

4 மணத்தியாலங்கள் ago

நண்பருடன் சென்ற 10-ஆம் வகுப்பு சிறுமிக்கு சித்திரவதை… துன்புறுத்தல் வீடியோ லீக்… 32 கணக்குகள் மீது பாய்ந்த ஆக்ஷன்…. அதிரடி நடவடிக்கை…!!

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பயிற்சி நிறுவனம் ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியும், அவருடன் படிக்கும்…

4 மணத்தியாலங்கள் ago