தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களின் ஒருவர்தான் இசையமைப்பாளர் அனிருத். சமீபத்தில் வெளியான லியோ, விக்ரம், ஜெயிலர், வேட்டையன் மற்றும் ஜவான் என அனைத்து வெற்றி படங்களிலும் அனிருத் முக்கிய ஒருவராக இருந்துள்ளார். அவருடைய பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்தது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் உள்ள சூப்பர் ஸ்டார் படங்களுக்கு அனிருத் தான் இசையமைத்து வருகின்றார். அனிருத் இசையில் வரும் பாடல்கள் படங்களுக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன. அனிருத் 2011 ஆம் ஆண்டு வெளியான வை திஸ் கொலவெறி பாடல் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
பிறகு 2014 ஆம் ஆண்டு விஜய் நடித்த கத்தி திரைப்படத்திற்கு இசையமைத்து புகழ்பெற்றார். அனிருத் இதுவரை இரண்டு பிலிம் பேர் விருதுகள், 9 சைமா விருதுகள் மற்றும் ஆறு எடிசன் விருதுகள் ஆகியவற்றை பெற்றுள்ளார். அதே சமயம் உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றார். தற்போது ஒரு படத்திற்கு இசையமைக்க அனிருத் பத்து கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 34 வயதாகும் அனிருத் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வரும் நிலையில் அவருடைய திருமணம் எப்போது என்பது குறித்து சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவருடைய அம்மா பதிலளித்துள்ளார். அதில், கடவுள் எப்போ வழி விடுகிறாரோ அப்போ என் மகனுக்கு திருமணம் நடைபெறும் என நம்புகிறேன். அவனுடைய மனசுக்கு புடிச்ச மாதிரி ஒரு பொண்ணு அமைய வேண்டும். கிரியேட்டிவ் ஃபீல்டில் இருப்பவர்களுக்கு குடும்பம் என்பது ரொம்ப முக்கியம்.
அதனால் அவனுடைய வேலை நேரம் எல்லாத்தையும் புரிந்த மாதிரி ஒரு பெண் வர வேண்டும். இன்னைக்கு வரைக்கும் என்னோட பையன நான் குழந்தை மாதிரி தான் பாத்துக்குறேன். ஒரு அம்மாவாவே நான் இருந்துக்க விரும்புறேன். அதைத் தாண்டி அவனுடைய தனிப்பட்ட விஷயத்தில் அவனே முடிவெடுக்கட்டும். அவன் வாழ்க்கையில் நிறைய இடத்தில் அவனுக்கு நான் சப்போட்டா இருந்து வேலை பண்ணிட்டு இருக்கேன். அந்த லைன கிராஸ் பண்ணாம நான் இருந்துக்க விரும்புறேன் என்று அனிருத் அம்மா தெரிவித்துள்ளார்.
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…
ஈரோட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தந்தையின் தலையைப் பிடித்துத் தரையில் பலமாக மோதிக் கொன்ற மகனை போலீசார் கைது…
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிராம மக்களைத் தரையில் அமர வைத்து, கையில் லத்தியுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தும்…
சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்டு எந்தவிதமான தடுப்புகளும் எச்சரிக்கைப் பலகைகளும் இன்றித் திறந்த கிடந்த பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன்…
தவெக அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் எத்தகைய சதித் திட்டங்களைத் தீட்டினாலும், நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற எத்தகைய நடவடிக்கையையும் எதிர்கொள்ளக் கட்சி…