தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இசை இயக்குனர்களின் ஒருவர் இசையமைப்பாளர் அனிருத் இவர் அக்டோபர் 16ஆம் தேதி 1990 ஆம் ஆண்டு பிறந்தார்.

இவர் தந்தை நடிகர் ரவி ராகவேந்திரன் மற்றும் தாய் கிளாசிக்கல் டான்ஸர் லட்சுமி. அனிருத் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உறவினர்.

2011 ஆம் ஆண்டு சென்னை லயோலா கல்லூரி பட்டம் படிப்பை முடித்தார். இதைத் தொடர்ந்து ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் வெளியான ‘3’திரைப்படத்தில் இசையமைத்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இப்படத்தில் இசையமைப்பு 2012 ஆம் ஆண்டிற்கான சிறந்த கண்டுபிடிப்புக்கான விஜய் விருது,

பரபரப்பான இசை இயக்குனர் எஸ் ஐ ஐ எம் ஏ விருதும், சிறந்த இசை இயக்குனருக்கான எடிசன் விருது, ஒய் திஸ் கொலவெறி என்ற பாடலுக்காக பாடல் youtubeல் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த முதல் பாடலாகும்.

இதைத் தொடர்ந்து இவர் 2013 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘எதிர்நீச்சல்’ படத்தில் இசையமைத்து சிறந்த இசை அமைப்பாளருக்கான பிஹைண்ட்வுட்ஸ் தங்கப்பதக்கம் வென்றார் .

இப்பாடலுக்காக சிறந்த பாடலுக்கான விஜய் விருதையும் பெற்றார். சிறந்த இசையமைப்பாளருக்கான எஸ் ஐ ஐ எம் ஏ விரதம் பெற்றார்.

இதை தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு வெளியான வணக்கம் சென்னை என்ற படத்தில் ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர் ‘என்ற பாட்டு பாடலுக்காக சிறந்த இயக்குனர் சிறந்த இசை இயக்குனருக்கான எடிசன் விருதும்,

சிறந்த அமைப்பாளருக்கான பிஹைன்வுட்ஸ் தங்கப்பதக்கம் வென்றார். இவர் வேலையில்லா பட்டதாரி,

மான் கராத்தே, இரண்டாம் உலகம் ,மாரி,நானும் ரவுடிதான், தங்கமகன், கோலமாவு கோகிலா ,போன்ற பல படங்களில் இசையமைத்துள்ளார்.

இவர்சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவா உள்ளவர். தற்போது இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

