Categories: சினிமா

படத்தை விட பாடலின் பட்ஜெட் தான் அதிகம்.. 60 வருடங்களுக்கு முன்பே 1 கோடி செலவில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட பாடல்..!!

Spread the love

இந்திய சினிமாவில் தற்போது பிரம்மாண்டத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக பல கோடிகள் செலவு செய்யப்பட்டு படங்கள் எடுக்கப்படுகிறது. ஆனால் சுமார் 64 வருடங்களுக்கு முன்னர் ஒரு கோடி ரூபாய் செலவில் ஒரு பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலை 105 முறை திருத்தம் செய்து எழுதியுள்ளதை இதுவரை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கடந்த 1960 ஆம் ஆண்டு முகல் இ ஆசம் என்ற திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில் திலீப் குமார், பிரித்விராஜ் கபூர், மதுபாலா உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்திய சினிமா உலகில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான திரைப்படங்களில் இந்த திரைப்படமும் ஒன்று. இந்தப் படத்தில் பியார் கியா து தர்ணா கியா என்ற பாடலை மாஸ்டர் பீஸ் என்று வர்ணிக்கின்றனர். இந்தப் பாடல் உருவாக்கப்பட்டதில் பல சுவாரசியமான தகவல்கள் நிறைந்துள்ளன.

அதாவது இந்த பாடலுக்காக மிக பிரம்மாண்ட அளவில் செட் சுமார் இரண்டு ஆண்டுகளாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு பாடலுக்காக ஒரு கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். இந்த படத்தின் பட்ஜெட்டை விட இந்த பாடலுக்கு செலவிடப்பட்ட தொகை அதிகமாகும். இந்தப் பாடலுக்காக எழுதப்பட்ட வரிகள் முதலில் இசையமைப்பாளர் நவுஷாத்திற்கு திருப்தி அளிக்காததால் அதனை மீண்டும் மீண்டும் திருத்தி அமைத்துக் கொண்டே இருந்தனர். அதன்படி இந்த ஒரு பாடலை 105 முறை பாடல் ஆசிரியர் ஷகீர் பதாயுனி மாற்றி அமைத்துள்ளார்.

இந்தப் பாடலை பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் பாடினார். இந்தப் பாடலில் எக்கோ இருந்தால் நன்றாக இருக்கும் என்று பாடலாசிரியர் கருதிய நிலையில் அந்த காலத்தில் எக்கோ தொழில்நுட்பம் இல்லாததால் பாத்ரூமில் லதா மகேஷ்கரை பாட வைத்து பாடலை ரெக்கார்டு செய்துள்ளனர். இவ்வளவு முயற்சி செய்து உருவாக்கப்பட்ட இந்த பாடல் வசூல் ரீதியாக மிகப்பெரிய தொகையை அள்ளி குவித்தது. அது மட்டுமல்லாமல் படம் வெளியான காலத்தில் நம்பர் ஒன் வசூலை பெற்ற படம் என்ற ரெக்கார்டையும் இந்த திரைப்படம் ஏற்படுத்தியது.

Nanthini

Recent Posts

அமெரிக்க கப்பல்களை தாக்க டால்பின்களை பயன்படுத்தும் ஈரான்..? புது டெக்னாலஜியால் மிரண்டு போன டிரம்ப்… பெரும் பரபரப்பு..!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…

25 minutes ago

3 வயது சிறுவனை.. 30 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற தெருநாய்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வைரல்…!

கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…

40 minutes ago

உலகையே அதிர வைத்த வினோத விழிப்புணர்வு! வெண்கல மணிக்குள்ளே நிர்வாணமாகத் தொங்கிய கலைஞர்..வைரலாகும் ஷாக் வீடியோ..!

வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…

1 மணத்தியாலம் ago

ஒரே நொடி.. பதற வைக்கும் விபத்து..! மின்னல் வேகத்தில் பிரேக் போட்ட கார் டிரைவர் – ஜாபுவாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…

1 மணத்தியாலம் ago

விஜய்யின் முதல்வர் பதவியேற்பு விழா ரத்து..? கடைசி நேரத்தில் அதிர்ச்சி.. நாளை நடக்கப்போவது என்ன..??

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…

2 மணத்தியாலங்கள் ago

“தலைவருக்காக என் பதவியை ராஜினாமா செய்யத் தயார்” முதல்வரிடம் தமிமுன் அன்சாரி உருக்கம்… ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை..!!

சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…

2 மணத்தியாலங்கள் ago