மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவிலிருந்து விலகி, துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணியில் இணைந்த 6 எம்.பி.க்களுக்கு மாநில அரசு ‘ஒய் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களது தொகுதிகளில் பொதுமக்கள் மற்றும் உத்தவ் தாக்கரே ஆதரவாளர்கள் ஆங்காங்கே தீவிர போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அணி மாறிய எம்.பி.க்களில் ஒருவரான சஞ்சய் தினா பாட்டீல், போராட்டக்காரர்களுக்கு விடுத்த மிரட்டல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு எதிராகப் போராட்டம் நடத்தினால் சுடுகாடு அல்லது மருத்துவமனைக்குத்தான் செல்ல வேண்டியிருக்கும் என்றும், தன்னை எதிர்ப்பதற்கு முன்பு மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடுகளை எடுத்துக்கொள்ளுமாறும் அவர் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததைத் தொடர்ந்து, உத்தவ் தாக்கரே கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவுத், சஞ்சய் தினா பாட்டீலை உடனடியாகக் கைது செய்யக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், பாட்டீல் பொதுமக்களை அச்சுறுத்தியதோடு, கடந்த காலங்களில் தான் ஐந்து பேரைக் கொலை செய்திருப்பதாகக் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட அந்த 5 பேர் யார், எப்போது, எதற்காகக் கொல்லப்பட்டனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், போராட்டக்காரர்கள் மீது வெடிகுண்டுகளை வீசி வீடுகளுக்குள் நுழையப் போவதாக மிரட்டிய பாட்டீலை, தீவிரவாத தடுப்புப் படையின் உதவியோடு தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும் ராவுத் வலியுறுத்தியுள்ளார்.
பொதுமக்கள் மட்டுமன்றி பத்திரிகையாளர்களையும் சஞ்சய் தினா பாட்டீல் மிரட்டிய நிலையில், பின்னர் அதற்காக அவர் பத்திரிகையாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். இதற்கிடையே, இந்த மிரட்டல் சம்பவம் குறித்து உத்தவ் தாக்கரேவின் மகனும் கட்சியின் முக்கிய தலைவருமான ஆதித்ய தாக்கரே காட்டமாகப் பேட்டியளித்துள்ளார். சஞ்சய் தினா பாட்டீலுக்கு உண்மையிலேயே தைரியம் இருந்தால், அவர் உடனடியாகத் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு மக்களின் ஆதரவை நிரூபிக்க வேண்டும் என்று அவர் சவால் விடுத்துள்ளார்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…