“சும்மா அழுதுகிட்டே இருக்கு, நிம்மதியா தூங்க முடியல”… 3 மாத பிஞ்சு குழந்தையை தண்ணீர் தொட்டியில் போட்டு சாகடித்த தாய்… உச்சகட்ட கொடூரம்…!

Spread the love

ஆம்பூரில் மூன்று மாத பெண் குழந்தை வீட்டின் தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பெத்தலேகம் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் மேல் தளத்தில் அக்பர் பாஷா மற்றும் அர்ஷியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அக்பர் பாஷா தனியார் தொழிற்சாலையில் கார் டிரைவராக பணியாற்றி வரும் நிலையில் இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பாத்திமா என்ற பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் அர்சியாவின் தாய் பல்வலி காரணமாக மருத்துவமனைக்குச் சென்று மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அப்போது குழந்தை காணாமல் போனதை கண்டு மகளிடம் கேட்டுள்ளார்.

அர்ஷியா மற்றும் அவருடைய தாய் வீட்டில் தேடி வந்த நிலையில் தரைத்தளத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் பார்ப்போம் என்று தொட்டியை திறந்து உள்ளன. அப்போது குழந்தை இருந்ததை கண்டு கணவரை வரவழைத்து குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். உடனே தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் மேல் மாடியில் வசிக்கும் குழந்தை நடக்கக்கூட முடியாத நிலையில் தரைத்தளத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் எப்படி விழுந்தது என்று சந்தேகத்தின் அடிப்படையில் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் குழந்தையால் நிம்மதியாக தூங்க முடியவில்லை, குழந்தையை பார்த்துக் கொள்ள முடியவில்லை, மேலும் மூன்றாவது குழந்தை பிறந்தது முதல் எனக்கும் என் கணவருக்கும் சண்டை ஏற்படுகிறது. மன அழுத்தம் காரணமாக குழந்தையை தண்ணீர் தொட்டியில் போட்டுள்ளேன் என்று அர்ஷியா வாக்குமூலம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பெற்ற தாயே தன்னுடைய மூன்று மாத பெண் குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

FLASH: விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 9 அமைச்சர்கள் பதவியேற்பு.. யார் யார்..? எதிர்பார்ப்பில் தமிழகம்…!!

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…

3 மணத்தியாலங்கள் ago

“மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” சிக்கல்களை உருவாக்கினால் என்ன நடக்கும் தெரியுமா..? எச்சரித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..!!

தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…

3 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: விஜய் CM ஆக பதவியேற்கிறார்… அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…

3 மணத்தியாலங்கள் ago

“உங்க விஜய் நா வரேன்” நாளை மதியம் 3:15 மணிக்கு பதவியேற்கிறார் விஜய்… கொண்டாடும் தமிழகம்..!!

தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…

4 மணத்தியாலங்கள் ago

“சி. ஜோசப் விஜய் எனும் நான்…” அந்த வார்த்தைக்காக காத்திருக்கிறேன்… விஜய்மா நீ வருவ… ஸ்ரீமன் வெளியிட்ட உருக்கமான வீடியோ..!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…

4 மணத்தியாலங்கள் ago

“விஜய் RSS-ன் பிள்ளை” என்பதில் மாற்றமில்லை.. அதிரடி காட்டும் திருமாவளவன்! ஆதரவு அளிப்பது ஏன்? – அதிரவைக்கும் பின்னணி..!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…

4 மணத்தியாலங்கள் ago