“10 நாட்கள் ரகசியம்”… பாக்குத் தோட்டத்தில் தோண்டியபோது போலீசாருக்கே காத்திருந்த அதிர்ச்சி… பெற்ற தாயே செய்த கொடூரம்….!

Spread the love

வாழப்பாடி அருகே குடிக்க பணம் கேட்டு தகராறு செய்த மகனைத் தாக்கியதில் அவர் உயிரிழந்த நிலையில், உடலைப் பாக்குத் தோட்டத்தில் புதைத்த தாயை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள துக்கியாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (30) என்ற கட்டிட மேஸ்திரி, கடந்த சில நாட்களாக மாயமானதாக அவரது மனைவி வினோதினி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், கடந்த 23-ஆம் தேதி மணிகண்டன் தனது தாய் ஜோதியிடம் குடிக்கப் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது. அப்போது ஏற்பட்ட மோதலில் ஜோதி தனது மகனைத் தள்ளிவிட்டதில், தலையின் பின்புறம் பலத்த காயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மகனின் மரணத்தை மறைக்கத் திட்டமிட்ட தாய் ஜோதி, கணவர் சின்னப்பன் மற்றும் உறவினர் வீரமுத்து ஆகியோரின் உதவியுடன் மணிகண்டனின் உடலைத் தனது பாக்குத் தோட்டத்தில் ரகசியமாகப் புதைத்துள்ளார். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் இந்த அதிர்ச்சி உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன. இதனைத் தொடர்ந்து, வட்டாட்சியர் நாகலட்சுமி மற்றும் டிஎஸ்பி சபரிநாதன் முன்னிலையில் மணிகண்டனின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு, மருத்துவக் குழுவினரால் அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. மகனைப் படுகொலை செய்து உடலை மறைத்த குற்றத்திற்காக தாய் ஜோதியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

தைரியம் இருந்தா உதயசூரியனை விடுத்து.. தனிச்சு நின்னு ஜெயித்துக் காட்டுங்க..!ஜவாஹிருல்லாவுக்கு திமுகவினர் விடுத்த அதிரடி சவால்…!

தமிழக தேர்தல் அரசியலில் கூட்டணி கட்சிகள் பெரிய கட்சிகளின் சின்னங்களில் போட்டியிடுவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், திமுக கூட்டணியில்…

2 minutes ago

“ஒரு மாசத்துக்கு போன் பண்ணாதீங்க!” – அமித் ஷாவிடம் கெஞ்சிய அதிமுக பிரமுகர்… பின்னணியில் நடந்த பரபரப்பு டீலிங்…!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம் இன்னும் அமைதியடையாத நிலையில், பிரதான எதிர்க்கட்சியாக இருந்த அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ள…

5 minutes ago

விஜய்யின் ‘5 சால்வை’ ரகசியம்: அதிமுகவை அசைத்துப் பார்த்த தவெக-வின் மாஸ்டர் பிளான்… மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன் உடைத்த அடுக்கடுக்கான உண்மைகள்…!

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி மின்னல் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், தற்போதைய அரசியல் அதிரடிகள்…

10 minutes ago

கோவை சிறுமி கொலை வழக்கில்.. சிரித்து கொண்டே பதில் அளித்தாரா அமைச்சர் கீர்த்தனா..? இணையத்தில் வைரலாகும் வீடியோவின் பின்னணி என்ன..?

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு…

17 minutes ago

“பங்குச்சந்தை காலி?”… அடுத்து வரப்போகும் மிகப்பெரிய பொருளாதார புயல்… ‘ரிச் டாட் புவர் டாட்’ ஆசிரியர் சொன்ன ஷாக் நியூஸ்…!

உலகப் புகழ்பெற்ற 'ரிச் டாட் புவர் டாட்' (Rich Dad Poor Dad) புத்தகத்தின் எழுத்தாளரான ராபர்ட் கியோசாகி, நிதிச்…

17 minutes ago