ராஜஸ்தான் மாநிலம் டீக் மாவட்டம் படேஸ்ரா கிராமத்தில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தனது இரட்டைக் குழந்தைகளைக் கழுத்தறுத்துக் கொன்ற தாயும், அதற்கு உதவியாக இருந்த அவரது மூத்த மகனும் மற்றும் காதலனும் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கணவனை இழந்த ப்ரீதி சௌதரி என்பவருக்கு 3 மகன்களும் ஒரு மகளும் உள்ள நிலையில், அருகில் வசிக்கும் நபர் ஒருவருடன் அவருக்குக் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களின் உறவுக்கு இரட்டைக் குழந்தைகளான வினய் மற்றும் விஷ்ணு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். காதலன் குழந்தைகளை ஏற்க மறுத்ததால், உறவுக்காகத் தன் சொந்த இரட்டைக் குழந்தைகளையே தூங்கும்போது கள்ளக்காதலனுடன் சேர்ந்து ப்ரீதி கழுத்தறுத்துக் கொன்றுள்ளார்.
மேலும் இந்தத் கொடூரச் செயலுக்கு அவரது 16 வயது மூத்த மகனும் உடந்தையாக இருந்துள்ளான். தகவல் அறிந்து 6 மணி நேரத்திற்குள் வழக்குப் பதிவு செய்து விசாரித்த காவல்துறையினர், தாய், மூத்த மகன் மற்றும் காதலன் ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…