“பிஞ்சு குழந்தைகள் பார்க்கும்போதே இப்படியா?”…. அங்கன்வாடியில் டிரைவருடன் ஆசிரியர் செய்த பகீர் காரியம்… கண்டித்த கணவனுக்கு வந்த பயங்கர மிரட்டல்….!

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பரம்பை பகுதியைச் சேர்ந்தவர் வேணு (31). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வேறொரு மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது நான்கரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், வேணு தனது கடின முயற்சியால் சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவிக்கு கற்பகோடு அங்கன்வாடி மையத்தில் ஆசிரியர் வேலை வாங்கி கொடுத்துள்ளார். ஆனால், வேலைக்குச் சேர்ந்த இரண்டே மாதங்களில், அங்கு பேருந்து ஓட்டுநராக பணிபுரியும் வில்வின் என்ற இளைஞருடன் அந்தப் பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஊர் சுற்றி வந்ததோடு மட்டுமில்லாமல், தாங்கள் பணிபுரியும் அங்கன்வாடி மையத்திலேயே பாலியல் ரீதியான சில்மிஷங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். அங்கன்வாடிக்கு வரும் பிஞ்சு குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர் முன்னிலையிலேயே, எவ்வித அச்சமும் இன்றி அவர்கள் முகச்சுளிப்பை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனை அப்பகுதியினர் கண்டித்தும் அவர்கள் பொருட்படுத்தவில்லை. இந்த விவகாரம் குறித்து வேணு தனது மனைவியிடம் தட்டிக்கேட்டபோது, அவர்களுக்குள் கடுமையான குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த 12 சவரன் தங்க நகைகள் மற்றும் ₹50,000 ரொக்கப் பணத்தை எடுத்துக்கொண்டு, தனது நான்கரை வயது குழந்தையை தவிக்க விட்டுவிட்டு அந்தப் பெண் கள்ளக்காதலன் வில்வினுடன் தப்பியோடியுள்ளார். இதற்கிடையில் நாகர்கோவிலில் வைத்து வேணுவை நேரில் சந்தித்த வில்வின், அவரையும் அவரது குழந்தையையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வேணு, நாகர்கோவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கள்ளக்காதல ஜோடியிடமிருந்து தனக்கும் தனது குழந்தைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், திருடப்பட்ட நகைகளை மீட்டுத்தர வேண்டும் எனவும் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Nanthini

Recent Posts

திக்… திக்… நான் உங்கள் மகளைக் கொன்றேன்… போனில் மாமியாருக்கு ஷாக் கொடுத்த மாப்பிள்ளை… கர்நாடகாவில் அரங்கேறிய கொடூரம்…!

கர்நாடகாவில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மாப்பிள்ளை ஒருவர் தனது மாமியாரைத் தொலைபேசியில் அழைத்து, "நான் உங்கள் மகளைக் கொன்றேன்"…

22 minutes ago

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

8 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

8 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

9 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

9 மணத்தியாலங்கள் ago