Categories: சினிமா

ரத்தக் கண்ணீர் வந்தபோது எங்கப்பாவுக்கு உண்மையிலேயே அந்த நோய் வந்துவிட்டதாக நினைத்தார்கள்.. ராதாரவி பகிர்ந்த தகவல்!

Spread the love

தமிழ் சினிமாவில் தனக்கு முன்னோடி இல்லாத நடிகர்களில் ஒருவர் எம் ஆர் ராதா. தன்னுடைய தனித்துவமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர். மேடை நாடகத்தில் முடி சூடா மன்னனாக விளங்கியவர். 1930 மற்றும் 40 களிலேயே சில படங்களில் நடித்தாலும், நாடகம் அளவுக்கு அவருக்கு சினிமா பிடிக்கவில்லை. அதனால் நாடகங்களிலேயே கவனம் செலுத்தினார்.

அதன் பிறகு பத்தாண்டுகளுக்குப் பிறகு 1954 ஆம் ஆண்டு ரத்தக் கண்ணீர் திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதன் பின்னர் அவருக்கு குணச்சித்திர நடிகராக மிகப்பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த படம் என்றால் அது சிவாஜியோடு அவர் இணைந்து நடித்த ‘பாகப்பிரிவினை’ திரைப்படம்தான். அந்த படத்தில் சிங்கபூரான் என்ற வேடத்தில் கலக்கி இருப்பார் ராதா. ராதாவை நம் படத்தில் போட்டால் அவரே நகைச்சுவை மற்றும் வில்லத்தனம் என இரண்டையும் பார்த்துக்கொள்வார் என அவரை எல்லா படத்திலும் புக் பண்ண ஆரம்பித்தனர்.

எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி ஆகிய இருவரும் தமிழ் சினிமாவில் இருபெரும் நடிகர்களாக உருவாகி வந்த காலத்தில் கூட அவர்களுக்காக பணிந்து போகாதவர் எம் ஆர் ராதா. இருவரும அவரை மரியாதையோடு “அண்ணே” என்றுதான் அழைப்பார்கள். அப்படி இருந்த நிலையில் ஒருநாள் எம் ஜி ஆரோடு எம் ஆர் ராதா முரண்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் எம் ஆர் ராதா பற்றி பேசியுள்ள அவருடைய மகன் ராதாரவி “எங்கப்பா நடிச்ச ரத்தக் கண்ணீர் திரைப்படம் வந்த போது அவரின் நடிப்பைப் பார்த்து மிரண்ட பலரும் அவருக்கு உண்மையாகவே குஷ்டம் வந்துவிட்டதாக நினைத்தார்கள். அதனால்தான் சில ஆண்டுகள் அவருக்குப் படம் வரவில்லை போல.

அதன் பின்னர் பாகப்பிரிவினை வந்து அவரை புகழின் உச்சத்துக்குக் கொண்டு சென்றது. அதன் பின்னர் ‘ராதா இல்லாத படம் சாதா’ என சொல்லுமளவுக்கு அவரின் புகழ் இருந்தது” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

“அன்பாக வளர்த்த செல்ல கழுதையை சுட்டுக்கொன்ற கொடூரம்…” அமெரிக்காவில் போலீசார் செய்த காரியம்.. நிதி திரட்டும் தளத்தில் ரூ.30 லட்சத்திற்கு மேல் குவிந்த உதவி… அதிர்ச்சி சம்பவம்..!!

அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள ராக்மார்ட் பகுதியில் ஹன்னா இஸ்ரேல் என்பவரது குடும்பத்தினர் 'ஹீ-ஹா' என்ற குட்டி ஆண் கழுதையைத்…

8 minutes ago

“என் பிள்ளையை பாருங்க… ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க…” ஆக்சிஜன் மாஸ்க்குடன் நின்ற தந்தை… நோயுடன் தவித்த பிஞ்சு குழந்தை… கதறும் தாய்… ஷாக்கிங் வீடியோ வைரல்…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் இடநெருக்கடி காரணமாகப் தீவிர நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையுடன் பெற்றோர் மருத்துவமனைக்கு…

19 minutes ago

சண்டை தான் வரும்…! “தெரு நாய்களுக்கு உணவு அளித்தால் ரூ.5,000 அபராதம்…” மீரா பயந்தர் மாநகராட்சியின் உத்தரவுக்கு எதிர்ப்பு…!

மும்பை அருகே உள்ள மீரா பயந்தர் மாநகராட்சி , குறிப்பிட்ட 20 இடங்களைத் தவிர்த்துப் பிற பொது இடங்களில் தெரு…

39 minutes ago

மனித குலத்திற்கு மிகபெரிய எச்சரிக்கை…! நேபாள வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,050 ஆக உயர்வு… 4,000 பேரை காணவில்லை… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு தரும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,050 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம்…

49 minutes ago

“தவெகவில் இணைந்த கையோடு முக்கிய பொறுப்பு…” சிங்கை ராமச்சந்திரனுக்கு CM விஜய் வழங்கிய பதவி… தவெகவில் கிளம்பிய பரபரப்பு…!!

தமிழக வெற்றிக் கழகத்தில் "தவெகவில் இணைந்த கையோடு முக்கிய பொறுப்பு..." சிங்கை ராமச்சந்திரனுக்கு CM விஜய் வழங்கிய பதவி... தவெகவில்…

59 minutes ago

இனி வெயிட் பண்ண வேண்டாம்…! 4 மணி நேரத்தில் கேஸ் சிலிண்டர் கிடைக்கும்…! இண்டேன் நிறுவனத்தின் அசத்தல் திட்டம் தொடக்கம்…!

பொதுவாக வீடுகளுக்கு 14.20 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது புதிதாக 10…

1 மணத்தியாலம் ago